- Advertisement -

மேஷம்:

தொலைதூரத்தில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வெளியூர்களில் இருந்து சுபச் செய்தி வரும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். நேரத்துக்கு சாப்பிடமுடியாதபடி பணிச் சுமை இருந்தபடி இருக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

ரிஷபம்:

பேச்சில் நிதானம் தேவை. சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு ஏற்படும். தாய் வழியில் நன்மைகள் நடக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்:

மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். அவர்களால் சில ஆதாயங்களும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மனம் உற்சாகமாகக் காணப்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும்.

கடகம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

- Advertisement -

சிம்மம்:

வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். கனிவான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். நீண்டநாள்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

கன்னி:

மனம் உற்சாகமாகக் காணப்படும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை வழிபாட்டால் நன்மை பெறலாம்.

- Advertisement -

துலாம்:

முயற்சிகளில் வெற்றியும் பணலாபமும் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும். மாலையில் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். புதிதாகத் தொடங்கும் காரியங்களைக் காலையிலேயே தொடங்குவது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். மனம் உற்சாகமாகக் காணப்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

தனுசு:

மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

மகரம்:

குடும்பப் பெரியவர்களின் அன்பும் ஆசிகளும் கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
- Advertisement -

கும்பம்:

உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் ஏற்படும். தந்தை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மீனம்:

மீன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி தாய் வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. பிள்ளைகள் வழியில் ஆறுதல் கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரிய மனிதர்களின் தொடர்பால் நன்மை ஏற்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by