- Advertisement -

மேஷம்: உற்சாகமான நாள். எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். பிறருடன் வாக்குவாதம் தவிர்க்கவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் ஆசிகளும் அனுக்கிரகமும் உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -


இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.

மிதுனம்:


தாய் வழி உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

கடகம்:

- Advertisement -


புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளியில் போகும்போது பொருட்கள் தொலைந்து போகக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு காரியத் தடைகள் ஏற்படும்.

சிம்மம்:


மனம் உற்சாகமாகக் காணப்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மாலையில் மனச் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

கன்னி:

- Advertisement -


தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். மனதில் உற்சாகம் பெருகும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரியங்களில் சிறு சிறு தடைகளைச் சந்திக்க நேரும்.

உங்கள் ராசிக்கான மே மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

துலாம்:


கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். நீண்டநாள்களாக கொடுத்து திரும்ப வராமல் இருந்த கடன் தொகை இன்று திரும்பக் கிடைக்கும். கடன் வாங்குவது மற்றும் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:


தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் மகிழ்ச்சி தரும்.

தனுசு:


எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பிற்பகலுக்கு மேல். எனவே, புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

மகரம்:


அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. மனம் உற்சாகமாகக் காணப்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

கும்பம்:


மனம் உற்சாகமாகக் காணப்படும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மீனம்:


பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மனம் உற்சாகமாகக் காணப்படும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை அளிக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -