- Advertisement -

மேஷம்:

உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கக்கூடும்.

ரிஷபம்:

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் ஏற்படும்.

கடகம்:

இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் வருகையும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகன யோகம் உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:

அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் நல்லபடி முடியும். தந்தையாலும் தந்தை வழி உறவினர்களாலும் நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மாலையில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் நன்மை உண்டாகும்.

கன்னி:

இன்று காரியங்களில் மிகுந்த பொறுமையும், கவனமும் தேவை. சிலரால் மனச் சங்கடமும் குழப்பமும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிற்பகலுக்கு மேல் குழப்பம் நீங்கி தெளிவும் உற்சாகமும் பிறக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும்.

- Advertisement -

துலாம்:

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். செலவுகளும் அதிகரிக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும் போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். சுவாதி முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

விருச்சிகம்:

வெளியூரில் இருந்து கிடைக்கும் தகவல் மனதுக்கு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாலையில் சிலருக்கு எதிர்பாராத பணவரவு உண்டு. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கக்கூடும்.

தனுசு:

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கோர்ட் வழக்கில் சாதகமான முடிவு ஏற்படும். பிற்பகலுக்கு மேல் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:

இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படக்கூடும்.
- Advertisement -

கும்பம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்:

பிற்பகல் வரை மனதில் இனம் தெரியாத சஞ்சலம் இருந்தாலும் அடுத்தடுத்து வரும் வேலைகளின் காரணமாக அதை அவ்வளவாகப் பொருட்படுத்தமாட்டீர்கள். எதிர்பாராத தனலாபம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by