- Advertisement -

மேஷம்:

மனதில் உற்சாகம் பெருகும். பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

- Advertisement -

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் ஏற்படும்.

ரிஷபம்:

- Advertisement -

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத உற்சாகம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், வார்த்தைகளில் கவனம் தேவை.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

- Advertisement -

மிதுனம்:

வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் ஆதாயம் கிடைக்கும்.

கடகம்:

உற்சாகமான நாள். மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதால், சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும். மாலையில் நீண்ட நாள்களாக சந்திக்காமல் இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்:

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரிய மனிதர்களின் தொடர்பால் நன்மை ஏற்படும்.

கன்னி:

இன்று உற்சாகமான நாளாக அமையும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

துலாம்:

அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் உற்சாகம் ஏற்படவும் கூடும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்:

எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

தனுசு:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணை வழியில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்:

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகன யோகம் உண்டாகும்.

கும்பம்:

அரசு அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடும் மனக் கசப்பும் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

மீனம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். பிற்பகலுக்குமேல் மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவம் ஒன்று நிகழும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

உங்களுக்கான இன்றைய ராசி பலன் முழுவதையும் நமக்காக கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்

- Advertisement -