திருவோணம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

astrology

திருவோணம்

thiruvonam

ஸ்ரீமகாவிஷ்ணுவின் நட்சத்திரம். கேரளத்தில் வாமன அவதாரத்துக்குக் காரணமான மகாபலியைப் போற்றும் வகையில், ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதனை சிரவணம் என வடமொழியில் குறிப்பிடுவர்.

திரிபுரத்தை எரிக்க சிவபெருமான் போரிட்டபோது, அவர் அமைத்த தேரிலும் ஆயுதங்களிலும் பல்வேறு தேவர்களும் சிவபெருமானுக்குச் சேவை செய்ததாக சிவபுராணம் கூறுகிறது. அதில் மேருமலை வில்லாக, மகாவிஷ்ணு அஸ்திரமானார். அதன் கூரான முனையில் அக்னியும் மறு முனையில் யமனும் அமர்ந்திருந்தனர். திரிபுரம் எரித்து அசுர சம்ஹாரம் நிகழ்ந்தது என்பது புராண வரலாறு. திருவோணமும் ஓர் அம்பு அல்லது அஸ்திர வடிவில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
astrology-wheel

திருவோணம் நட்சத்திரம் முதல் பாதம்:

செவ்வாய் இதன் அதிபதி. இதில் பிறந்தவர்கள் சௌகரியத்தை விரும்புவர். தனக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிப்பவர்கள், பிறருக்கு செலவழிக்க யோசிப்பார்கள். உடல்நலக் குறைவு அவ்வப்போது ஏற்படும். காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.

திருவோணம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்:

சுக்கிரன் இதனை ஆட்சி செய்பவர். இவர்கள் சுகத்தை விரும்புபவர்கள். திறமைசாலிகள். தலைமை தாங்கும் இயல்பும், தெய்வபக்தி உள்ளவர்கள். பெரியோர்களை மதிப்பவர்கள்.
astrology wheel

திருவோணம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்:

புதன் இதன் அதிபதி. நிறைவான ஞானம், பக்தி உடையவர்கள். யோகி போல வாழ்பவர்கள். தர்மம் செய்வதிலும் கலைகளிலும் ஈடுபாடு கொண்டவர்கள். கோபம், குணம் இரண்டும் இருக்கும்.

திருவோணம் நட்சத்திரம் நான்காம் பாதம்:

சந்திரன் இந்தப் பாதத்தை ஆட்சி செய்கிறார். இவர்கள் சௌகரியமும், சௌபாக்கியமும் பெற்று வாழ்பவர்கள். பாசமும் நேசமும் மிக்கவர்கள். குடும்பத்தை நேசிப்பவர்கள். நட்பு மிக்கவர்கள். நியாயவாதிகள். உடனடிக் கோபமும் உடனடி சாந்தமும் இவர்கள் இயல்பு.

மற்ற நட்சத்திரங்களின் குணங்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இது போன்ற மேலும் பல தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.