- Advertisement -

மேஷம்:

நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவி இடையில் சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும். முக்கிய பிரமுகர்களின் நட்பும், அவர்களால் ஆதாயமும் உண்டாகும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் பண விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.

ராசி பலன் வீடியோ


- Advertisement -

ரிஷபம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படக்கூடும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும்.

- Advertisement -

மிதுனம்:

மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

கடகம்:

நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். நண்பர்களிடம் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

- Advertisement -

சிம்மம்:

சிம்ம ராசிக்கு இன்றைய ராசி பலன் படி இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நீண்ட நாள்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம்.

கன்னி:

வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.

துலாம்:

வாழ்க்கைத்துணை வழியில் சிறுசிறு சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். பிரபலங்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மைகள் ஏற்படும்.

விருச்சிகம்:

மாலையில் நண்பர்களின் சந்திப்பும், அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். நேரத்துக்குச் சாப்பிட முடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தனுசு:

நீண்டநாளாக எதிர்பார்த்து காத்திருந்த தகவல் வந்து சேரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

மகரம்:

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
- Advertisement -

கும்பம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை தேவை. மாலையில் சிலருக்கு லேசான தலைவலி வரக்கூடும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படக்கூடும்.

மீனம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். மாலையில் உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by