- Advertisement -

மேஷம்:

மனதில் உற்சாகம் பெருகும். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். உற்சாகமான நாள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ஆனி மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

- Advertisement -

ரிஷபம்:

அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்:

- Advertisement -

கோயில் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.

கடகம்:

பேசும்போது பொறுமை அவசியம். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு ஏற்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

சிம்மம்:

- Advertisement -

புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

கன்னி:

மனம் உற்சாகமாகக் காணப்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

துலாம்:

கோயில் விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். நினைத்த காரியங்கள் சாதகமாக முடியும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

விருச்சிகம்:

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அவர்களால் சில நல்ல திருப்பங்களும் ஏற்படக்கூடும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

தனுசு:

புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு உதவி செய்வார்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மகரம்:

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும் .வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

கும்பம்:

நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியங்கள் ஏற்பாடாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மீனம்:

புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். கொடுத்த கடன் திரும்ப வரும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

உங்களுடைய இந்த நாள் இந்த ராசி பலன் மூலம் மேலும் சிறப்படையும் என்று நம்புகிறோம்.

- Advertisement -