- Advertisement -

மேஷம்:

சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். புதிதாக அறிமுகமான நபர்களால் ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனமும் மகான்களின் ஆசியும் கிடைக்கும்.

ரிஷபம்:

- Advertisement -

வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

ஆனி மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

மிதுனம்:

- Advertisement -

கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்தும் வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத நல்ல தகவல்கள் வரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்:

வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். வீட்டில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதரர்களுடன் சிறு அளவில் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும்.

சிம்மம்:

- Advertisement -

மாலையில் விருந்தினர் வருகை உண்டு. அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தேவையான உதவிகள் கிடைக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கன்னி:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்:

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். பிற்பகலுக்கு மேல் குழப்பம் நீங்கி தெளிவும் உற்சாகமும் பிறக்கும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:

தேவையான உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் வேலைகள் அடுக்கடுக்காக வந்தாலும் அழகாகச் சமாளிப்பீர்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

தனுசு:

பிற்பகலுக்கு மேல் ஏற்படும் திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்தி வரும். மாலையில் வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் வருகையும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் பண விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.

மகரம்:

கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். உற்சாகமான நாள். சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

கும்பம்:

புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பேசும்போது பொறுமை அவசியம். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

மீனம்:

சிலரால் மனச் சங்கடமும் குழப்பமும் ஏற்படக்கூடும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -