- Advertisement -

மேஷம்:

மேஷ ராசிக்கு இன்றைய ராசி பலன் படி மனதில் உற்சாகம் பெருகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உற்சாகமான நாள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று மாலை புண்ணியத் தலங்களை தரிசிக்க வாய்ப்பு உண்டு.

ரிஷபம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். வெளியூர்களில் இருந்து சுபச் செய்தி வரும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் லேசான தலைவலி ஏற்படக்கூடும்.

- Advertisement -

மிதுனம்:

வாகனத்தில் சிறிய அளவில் பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பழைய கடன் பாக்கி இன்று கிடைக்கும். அவசியத் தேவைகளுக்கு எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

கடகம்:

நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உறவினர்களின் வரவும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புனர்பூசம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:

தெய்வப் பணிகளில் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டு.

கன்னி:

இன்றைக்குப் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

துலாம்:

உணவு விஷயத்தில் கவனம் தேவை. காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். ஆனால், பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.

விருச்சிகம்:

எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு காரியங்களில் தடை தாமதம் ஏற்படக்கூடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். விசாகம் நட்சத்திரத்தில் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

தனுசு:

மாலையில் உறவினர்கள் வருகை உற்சாகம் தருவதாக அமையும். சிலருக்கு வாகன யோகம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்:

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும் அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புராதனமான கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:

சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு உண்டு. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

மீனம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வராது என்று நினைத்திருந்த கடன் தொகை வந்து சேரும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by