- Advertisement -

மேஷம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும்.சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும்.மாலையில் உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோர்களின் ஆசிகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

ரிஷபம்:

மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. பிள்ளைகளிடம் அதிகக் கண்டிப்பு காட்டவேண்டாம்.நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மிதுனம்:

இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். காரிய அனுகூலம் உண்டாகும். உறவினரிடமிருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

கடகம்:

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும்.எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு.மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.

தினசரி தமிழ் காலண்டர் 2018 குறிப்புகளை அறிய இங்கு கிளிக் செய்யவும்.

சிம்மம்:

இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். மாலையில் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு அமையும். பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும். உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

கன்னி:

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்பப் பொறுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

துலாம்:

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். புதிதாகத் தொடங்கும் காரியங்களைக் காலையிலேயே தொடங்குவது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். மனம் உற்சாகமாகக் காணப்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்:

இன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு:

உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபடுவதையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

மகரம்:

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சாதகமான பலன்களைத் தரும். சிலருக்கு உறவினர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாய் வழியில் நன்மைகள் நடக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபடுவதையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

கும்பம்:

தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். குடும்பம் தொடர்பான விஷயங்களை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை சேரும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மீனம்:

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்களிடமிருந்து சுப செய்தி வரும். உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பிற்பகலுக்குமேல் நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

உங்கள் நாள் மேலும் சிறப்படைய இந்த ராசி பலன் உங்களுக்கு உதவும் என் நம்புகிறோம்.

- Advertisement -
- Advertisement -