- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (25/05/2019): தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

மேஷம்:

உற்சாகமான நாளாக அமையும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அரசாங்க விஷயங்களில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபம்:

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். கனிவான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். உங்கள் ஆலோசனைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்:

இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அறிவுப்பூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

கடகம்:

மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நண்பர்களிடம் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருப்பது அவசியம்.

- Advertisement -

சிம்மம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.குடும்பப் பெரியவர்களின் அன்பும் ஆசிகளும் கிடைக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்கு இன்றைய ராசி பலன் படி குரு கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும் நாள். ஆனாலும் புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். சிலருக்குப் புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபடும் பாக்கியம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சற்று குறைவாகத்தான் கிடைக்கும். வீட்டில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்:

அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும். வீடு, மனை வாங்க நினைத்த முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை வழியில் பண உதவி கிட்டும். இன்று எதையும் பொறுமையாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.

விருச்சிகம்:

காலையில் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு எதிர்பாராத சந்திப்பு மகிழ்ச்சி தரும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மை உண்டாகும்.

தனுசு:

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வெளியில் செல்லும்போது பள்ளி, கல்லூரி கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் பணவரவு உண்டாகும்.

மகரம்:

காலையில் அன்றாடப் பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். இன்றைக்கு புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.
- Advertisement -

கும்பம்:

மனதில் உற்சாகம் நிலவும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

மீனம்:

இன்று சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டாலும், காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by