- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (25/06/2019): இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும்

மேஷம்:

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

ரிஷபம்:

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்:

இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்:

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் பணிகளில் உதவியாக இருப்பது ஆறுதல் தரும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே நடைபெறும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

- Advertisement -

சிம்மம்:

வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கன்னி:

புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், உரிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும், சலுகைகளும் கிடைப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

- Advertisement -

துலாம்:

இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபடவேண்டி இருக்கும். உறவினர் வருகை உற்சாகம் தரும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டுக்கொள்வார்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் நன்மை ஏற்படும்.

விருச்சிகம்:

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களையும், வெளியிடங்களில் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும்.அலுவலகப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் காரியங்களில் சிறு தடைகள் ஏற்படும்.

தனுசு:

உற்சாகமான நாளாக அமையும். திடீர் பொருள்வரவு மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விற்பனையும் விறுவிறுப்பாக இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்

மகரம்:

எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை கள் நீங்கும். லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மை ஏற்படும்.
- Advertisement -

கும்பம்:

கும்ப ராசிக்கு இன்றைய ராசி பலன் படி உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் குடும்பத் தினருடன் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

மீனம்:

இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by