
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீட்டின் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்வீர்கள். சில பேருக்கு பொன் பொருள் வாங்கக்கூடிய யோகமும் வரும். சுப காரிய தடை விலகும். நல்லது நடக்கும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். முன்கோபம் குறையும். எதிரிகளை மன்னித்து விடுவீர்கள். மன நிம்மதியை பெறுவீர்கள். பயணங்களின் போது கூடுதல் கவனம் தேவை.
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். உடன் வேலை செய்பவர்களோடு சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அனுசரித்து சென்றால் பிரச்சனை இல்லை. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. கூடுமானவரை செலவை குறைத்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
கடக ராசி காரர்களுக்கு இன்று மனதளவில் சில குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்த முடியாது. மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். இறை நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
சிம்ம ராசிக்காரர்கள் இன்று கவனமாக செயல்பட வேண்டும். நீண்ட தூர பயணங்கள் வேண்டாம். அலைச்சல் வேண்டாம். குறிப்பாக வயதில் முதியவர்கள் உங்களுடைய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. வேலையிலும் வியாபாரத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும். அவசர முடிவு எடுக்க வேண்டாம்.
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நிதானமாக சிந்தித்து செயல்படக்கூடிய நாளாக இருக்கும். உங்களுக்கு தேவையான உதவிகள் தேவையான நேரத்தில் கிடைக்கும். உறவுகள் நண்பர்களுடைய அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளக்கூடிய நாள் இன்று. எதிரி தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புது நண்பர்களின் அறிமுகம் இருக்கும். புது வேலைகளை கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அமையும். பிரமோஷனுக்காக நீங்கள் செய்த முயற்சி வெற்றியைத் தரும். தீரா துன்பத்திலிருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் செய்ய முடியாத வேலையை இன்று கையில் எடுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் கூட நல்லபடியாக நடந்து முடியும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். சுப செலவுகள் ஏற்படும்.
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிம்மதியான நாளாக இருக்கும். மன நிறைவோடு இருப்பீர்கள். உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம் வங்கி கடன் முயற்சிக்கலாம். முருகர் வழிபாடு செய்வது மனதிற்கு இனிமையாக இருக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். உடல் சோர்வு இருக்காது. சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். முருகர் வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி பாகை சூடுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். பயணங்களில் நன்மை நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கவனம் தேவை.
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இழந்த நிறைய நல்ல விஷயங்களை மீண்டும் பேசுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கொஞ்சம் வீண் விரைய செலவுகள் அதிகரிக்கும். நிதி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.