- Advertisement -

மேஷம்:


புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.

ரிஷபம்:

- Advertisement -


இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உறவினர்களின் உதவி திருப்தி அளிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகம் பிறக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும்.

மிதுனம்:


தாய் வழி உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று புதிய முயற்சிகளைத் தொடங்கலாம்.

கடகம்:

- Advertisement -


எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் உண்டாகும்.

சிம்மம்:


வாழ்க்கைத்துணையின் வழியில் பண உதவி கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களிடம் கனிவாகப் பேசி உங்கள் காரியங்களை திறமையாக முடித்துக் கொள்வீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

உங்கள் ராசிக்கான சித்திரை மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

- Advertisement -

கன்னி:


அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும்.

துலாம்:


உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.

விருச்சிகம்:


காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். அதேநேரத்தில் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் ஏற்படும்.

தனுசு:


உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். காலை வேளையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மகரம்:


இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். வீண் செலவுகள் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

கும்பம்:


பிற்பகல் வரை எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் உற்சாகம் பிறக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

மீனம்:


சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அனுபவபூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -