சித்திரை மாத ராசி பலன் 2018

chithirai
- Advertisement -

மேஷம்:

1-ல் சூரியன், 1,2-ல் சுக்கிரன்; 4-ல் ராகு; 7-ல் குரு (வ); 9-ல் சனி; 9,10-ல் செவ்வாய்; 10-ல் கேது; 12, 1 -ல் புதன்
மேஷராசி அன்பர்களே! சுக்கிரன், குரு மாதம் முழுவதும், ஏப்ரல் 30-க்குப் பிறகு செவ்வாயும் நன்மை தருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பிரச்னைகள் தீர்ந்து மனம் நிம்மதியடையும். காரியங்களில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகி, காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தவறான நண்பர்களைப் புரிந்துகொண்டு விலகிவிடுவீர்கள். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள் தவற்றை உணர்ந்து மீண்டும் வந்து பேசுவார்கள்.

- Advertisement -

சகோதர வகையில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து அன்னியோன்னியம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். ஆனால், உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்குப் பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு.

தொழிலதிபர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பல வகைகளிலும் அனுகூலமான மாதம். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.
அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதிகாரிகள் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிலருக்குப் பதவி உயர்வுக்கும் வாய்ப்பு உண்டு.

- Advertisement -

கலைஞர்களுக்கு எதிரிகள் வகையிலிருந்து வந்த தொல்லைகள், முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதுடன் பணவரவும் கணிசமாக அதிகரிக்கும்.

மாணவர்களுக்குப் படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்ப்பது நல்லது. குழப்பமான நேரங்களில்

- Advertisement -

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனையைப் பெறுவது எதிர்காலத்துக்கு நல்லது. பெண்களுக்குக் கணவன் மற்றும் குடும்பத்தினரிடம் மரியாதை அதிகரிக்கும். வேலை பார்க்கும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi

12-ல் சூரியன்; 12,1-ல் சுக்கிரன்; 3-ல் ராகு; 6-ல் குரு(வ); 8-ல் சனி; 8,9-ல் செவ்வாய்; 9-ல் கேது; 11, 12-ல் புதன்
ரிஷபராசி அன்பர்களே! மாதம் முழுவதும் சுக்கிரன் மற்றும் ராகுவும், மாத முற்பகுதியில் புதனும் அனுகூலப் பலன்களைத் தருவார்கள். ஆனால், பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால், எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். மற்றபடி பிரச்னை எதுவும் இருக்காது.உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையில் அன்னியோன்னியம் அதிகரிக்கும். மாத முற்பகுதியில் தாய்மாமன் வகையில் அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும். தேவையில்லாத சகவாசத்திலிருந்து விடுபடுவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். சகோதரர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். ஷேர் மூலம் ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நிறுவனத்தை விரிவுபடுத்தலாம். ஆனால், வீண் செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. போட்டியாளர்களைச் சமாளிக்க கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

பணியாளர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஆனால், வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் இடமாற்றத்தையும், சிலர் பொல்லாப்பையும் சந்திக்கலாம். பொறுமையுடன் அனுசரித்து போகவும். வேலையில் கவனமாக இருக்கவும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். சிலருக்கு வேண்டிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும்.

கலைஞர்களுக்குப் புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாதக் கடைசியில் எதிரிகளால் தொல்லையும், போட்டியும் அதிகம் இருக்கும். பொது நல சேவகர்கள், அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

மாணவர்கள் மாத ஆரம்பத்தில் முன்னேற்றப் பாதையில் செல்வர். ஆசிரியர்களிடம் நற்பெயர் பெறுவர். பிற்பகுதியில் புதன் சாதகமற்ற நிலைக்குச் செல்வதால், சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம். கவனம் தேவை.

பெண்மணிகளுக்குக் குடும்பத்தை நிர்வகிப்பதில் சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டாலும், அதனால் பெரிதும் பாதிப்பு இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்குத் தற்காலிக இடமாற்றம் உண்டாகும்.

மிதுனம்:
Mithunam Rasi

11-ல் சூரியன்; 11,12-ல் சுக்கிரன்; 2-ல் ராகு; 5-ல் குரு(வ); 7-ல் சனி; 7,8-ல் செவ்வாய், 8-ல் கேது; 10,11-ல் புதன்
மிதுனராசி அன்பர்களே! சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் மாதம் முழுவதும் நற்பலன்களைத் தரக் காத்திருக்கிறார்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.. தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிதுர்வழிச் சொத்தில் இருந்த பிரச்னை சுமுகமாக முடியும். சிலருக்குப் பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையில் அன்னியோன்னியம் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். குடும்பத்தினருடன் வெளி மாநிலங்களிலுள்ள புகழ்பெற்ற கோயில்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்குத் தொழில் அபிவிருத்தி அடையும். வியாபாரத்தில் சாமர்த்தியமாகச் செயல்பட்டு நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும்.

பணியாளர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். பிரச்னைகள் வந்தாலும், இருக்கும் இடம் தெரியாமல் போகும். சிலருக்கு உன்னதமான பலன்கள் ஏற்படும். எதிலும் வெற்றி காணலாம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும்.

கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். வசதிகள் பெருகும். சக கலைஞர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.

மாணவர்களுக்கு குரு பக்கபலமாக இருப்பதால் நல்ல வளர்ச்சி காணலாம். சிறந்த மதிப்பெண்ணுடன் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குப் பிரச்னை எதுவும் இருக்காது. தேவையான பணம் கிடைக்கும். உறவினர்களிடம் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.

கடகம்:
Kadagam Rasi

10-ல் சூரியன்: 10,11-ல் சுக்கிரன்; 1-ல் ராகு; 4-ல் குரு(வ); 6-ல் சனி; 6,7-ல் செவ்வாய், 7-ல் கேது; 9,10-ல் புதன்
கடகராசி அன்பர்களே! சூரியன், சுக்கிரன், சனி, ஏப்ரல் 29 வரை செவ்வாய், மே 2 முதல் புதன் ஆகியோர் நற்பலன் தரக் காத்திருக்கிறார்கள். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். எதிர்பாராத பல நன்மைகள் கிடைக்கும். காரியங்களில் இருந்த தடை, தாமதங்கள் நீங்குவதுடன் புதிய முயற்சிகளும் அனுகூலமாக முடியும். செல்வாக்கு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கைகூடி வரும். வீட்டில் இருந்த பிரச்னை, உறவினர்களிடையே கருத்து வேறுபாடு, பொருள் இழப்பு முதலியன நீங்கும். ஆனால், உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். கணவன் – மனைவிக்கிடையே பாசம் மேலோங்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். அவர்களால் ஆதாயமும் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னை சுமுகமாக முடியும். வழக்குகளில் சாதகமான

தீர்ப்பு கிடைக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அரசின் சலுகை, வங்கிக் கடன் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அவர்களின் சாமர்த்தியத்தால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
பணியாளர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அலுவலகத்திலிருந்து வந்த அலைச்சல், பணிச்சுமை குறைவதால், உற்சாகமாகக் காணப்படுவீர்கள். நிர்வாகத்திடம் முக்கிய கோரிக்கை வைப்பதற்கு உகந்த மாதம். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

கலைஞர்களுக்கு நற்பெயரும் புகழும் உண்டாகும். அரசாங்க விருதுகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக கலைஞர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் விலகும்.

மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்குக் கடுமையாக உழைத்துப் படிக்கவேண்டியிருக்கும்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பைப் பெறுவர். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். புத்தாடை, நகை வாங்கலாம். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.

சிம்மம்:
simmam

9-ல் சூரியன்; 9,10-ல் சுக்கிரன்; 12-ல் ராகு; 3-ல் குரு(வ); 5-ல் சனி; 5,6-ல் செவ்வாய்; 6-ல் கேது; 8,9-ல் புதன்
சிம்மராசி அன்பர்களே! கேது, மே 1 வரை புதன், ஏப்ரல் 30-க்குப் பிறகு செவ்வாய் ஆகியோர் மட்டுமே நன்மை செய்வார்கள். பொருளாதார வளம் மேம்படும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தேவையற்ற செலவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. குடும்பப் பெண்கள் பல வகையிலும் ஒத்துழைப்பு தருவர். விருந்து, விழா எனச் சென்று வருவீர்கள். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். ஒதுங்கியிருப்பது நல்லது. ஆனால், அவர்களால் நன்மை கிடைக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளைச் சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்வது நல்லது. தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாத முற்பகுதியில், நீங்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். வீடு கட்டவோ அல்லது விரிவுபடுத்தவோ தேவையான கடனுதவி கிடைக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.

சுபநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் சாதகமாக முடியும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் ஓரளவு லாபமடைவர். மாத ஆரம்பத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மாதப் பிற்பகுதியில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பங்குதாரர்களால் பிரச்னை ஏற்பட்டாலும், பாதிப்பு எதுவும் இருக்காது. பணியாளர்களுக்காகச் செலவு செய்யவேண்டியிருக்கும்.

பணியாளர்களுக்குப் பணிச்சுமையும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். ஆனால், அதற்கேற்ற பலன் கிடைக்கும். சிலருக்குச் சலுகையுடன் கூடிய இடமாற்றம் உண்டு. மாத முற்பகுதியில் பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சில சலுகைகள் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த கடன் எளிதில் கிடைக்கும்.
கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள், அரசிடமிருந்து விருது போன்றவை கிடைக்கும். சக கலைஞர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.

மாணவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். அதற்குரிய பலன்கள் இப்போது இல்லாவிட்டாலும் தக்க சமயத்தில் கிடைக்கும். மற்ற மாணவர்களின் சொந்த விஷயங்களில் சற்று ஒதுங்கியிருக்கவும்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

8-ல் சூரியன்; 8,9-ல் சுக்கிரன்; 11-ல் ராகு; 2-ல் குரு(வ); 4-ல் சனி; 4,5-ல் செவ்வாய்; 5-ல் கேது; 7,8-ல் புதன்
கன்னிராசி அன்பர்களே! சுக்கிரன், ராகு குரு ஆகியோர் மாதம் முழுவதும் மே 1-க்குப் பிறகு புதனும் அனுகூலமான பலன்களைத் தரக் காத்திருக்கிறார்கள். மனதிலும், உடலிலும் புத்துணர்ச்சி மேலோங்கும். செயலாற்றல் மேம்படும். முயற்சிக்கேற்ப வாழ்வில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த செயலை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவியாக இருப்பர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. புதுமணத் தம்பதியர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். பொன், பொருள் சேரும். விருந்து விழா எனச் சென்று வருவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அன்பு பெருகும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். ஆனாலும், அவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எதிர்பாராமல் பணம் கிடைக்கும். அண்டை வீட்டார் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். உடல்நலம் சீராகும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டுச் செயல்படுவார்கள். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு காட்டுவார்கள். எதிர்பார்த்த பதவிஉயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

கலைஞர்களுக்கு வருமானம் அவ்வளவாக இல்லாவிட்டாலும், நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மனதுக்கு உற்சாகம் தரும். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

மாணவர்கள் போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். கல்வியில் சிறந்து விளங்குவர்.

பெண்களுக்கு, கணவனின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

துலாம்:
Thulam Rasi

7-ல் சூரியன்; 7,8 -ல் சுக்கிரன்; 10-ல் ராகு; 1-ல் குரு(வ); 3-ல் சனி; 3,4-ல் செவ்வாய்; 4-ல் கேது; 6,7-ல் புதன்
துலாம்ராசி அன்பர்களே! சனி, ஏப்ரல் 20-க்குப் பிறகு சுக்கிரன், ஏப்ரல் 30 வரை செவ்வாய், மே 1 வரை புதன் ஆகியோரால் நற்பலன்கள் கிடைக்கும். எந்த ஒரு செயலையும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிக்கலாம். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் குடிகொள்ளும். குடும்பத்தில் பெண்களின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சி நிலவும். எடுத்த முயற்சி வெற்றி பெறும். சகோதரிகளால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா எனச் சென்று வருவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படக்கூடும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பழுதான வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள். மாத முற்பகுதியில் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் சகோதர வகையில் அலைச்சலும் செலவுகளுமே மிஞ்சும். கணவன் – மனைவிக்கிடையில் மாதப் பிற்பகுதியில் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும்.

வியாபாரிகளுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கி நிதியுதவி எளிதாகக் கிடைக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். பொருளாதார வளம் மேம்படும். எதிரிகளின் இடையூறுகளை முறியடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள்.

அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். உங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் செய்யவும். அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும்.
கலைஞர்களுக்கு முன்னேற்றத்துக்கான வாய்ப்பு ஏற்படும். விடாமுயற்சியின் மூலம் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சிலர் மறைமுகப் போட்டியைச் சந்திக்க நேரிடலாம்.

மாணவர்கள் பிற்போக்கான நிலையிலிருந்து விடுபடுவர். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

பெண்கள் குடும்பத்தினரின் நன்மதிப்பைப் பெறுவர். உங்களால் குடும்பத்தின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக் கடனுதவி எளிதாகக் கிடைக்கும்.

விருச்சிகம்:
Virichigam Rasi

6-ல் சூரியன்; 6,7-ல் சுக்கிரன்; 9-ல் ராகு; 12-ல் குரு(வ); 2-ல் சனி; 2,3-ல் செவ்வாய், 3-ல் கேது; 5,6-ல் புதன்
விருச்சிகராசி அன்பர்களே! சூரியன், கேது மாதம் முழுவதும் ஏப்ரல் 30-க்குப் பிறகு செவ்வாய், மே 1-க்குப் பிறகு புதன் ஆகியோரால் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி இந்த மாதம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும், உடனே நீங்கிவிடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்த்துவிடுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் முயற்சி சாதகமாக முடியும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்குக் குடும்பத்துடன் ஆன்மிகப் பயணங்கள் மேற்கொண்டு, பிரசித்திப் பெற்ற வெளிமாநிலப் புண்ணியத் தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் மாதப் பிற்பகுதியில் சிறப்பான பலன்களைக் காணலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிர்பாராத பண வரவால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். போட்டிகள் குறையும்.

பணியாளர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவர். பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.

கலைஞர்களுக்குப் பெண்கள் வகையில் இருந்த இடர்பாடு மாதக்கடைசியில் மறையும். பொருளாதார வளம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழ், பாராட்டு கிடைக்கும்.

மாணவர்களுக்கு மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படவும்.

பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறுவர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அனுகூலமாக இருப்பர். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான மாதம். சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்குத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

உங்கள் ராசிக்கான தமிழ் புத்தாண்டு பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

தனுசு:
Dhanusu Rasi

5-ல் சூரியன்; 5,6-ல் சுக்கிரன்; 8-ல் ராகு; 11-ல் குரு(வ); 1-ல் சனி; 1,2-ல் செவ்வாய்; 2-ல் கேது; 4,5-ல் புதன்
தனுசுராசி அன்பர்களே! குரு மாதம் முழுவதும், ஏப்ரல் 20 வரை சுக்கிரனும், மே 1 வரை புதனும் சாதகமாக உள்ளார்கள். ஓரளவு முன்னேற்றம் தரும் மாதமாக அமையும். எடுத்த செயல் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பொருளாதார வளம் கூடும். மாத முற்பகுதியில் கணவன் – மனைவிக்கிடையே அன்னியோன்னியம் இருந்தாலும், மாதப் பிற்பகுதியில் சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையுடன் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண முயற்சிகளிலிருந்து வந்த தடைகள் நீங்கி, சாதகமாக முடியும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணவரவு நன்றாக இருக்கும். புதிய வாகனம் வாங்கலாம். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பரப் பொருள்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரித்தாலும், நல்ல வளார்ச்சியும், பணவரவும் இருக்கும். பங்குதாரர்கள் தக்க சமயத்தில் உதவுவர். சிலநேரங்களில் முயற்சிகளில் தடைகள் வரலாம்.

பணியாளர்கள் சிறப்பான வளர்ச்சி காணலாம். சம்பள உயர்வுக்குத் தடையில்லை. வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவர். பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்குச் சாதகமான பதில் வரும்.

கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வசதி வாய்ப்புகள் பெருகும்.

மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதோடு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடும் வல்லமை கிடைக்கும்.

பெண்களுக்குக் குடும்பத்தோடு புனித தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.

மகரம்:
Magaram rasi

4-ல் சூரியன்; 4,5-ல் சுக்கிரன்; 7-ல் ராகு; 10-ல் குரு(வ); 12-ல் சனி; 12,1-ல் செவ்வாய்; 1-ல் கேது; 3,4-ல் புதன்
மகரராசி அன்பர்களே! சுக்கிரன் மற்றும் புதன் ஆகியோர் மட்டுமே அனுகூலமாக இருக்கிறார்கள். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும். பொன் பொருள் சேரும். சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மறையும். கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். உறவினர்கள் வகையில் வீண் விரோதம் வரலாம். அவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பது நல்லது. சிலருக்குத் தடைபட்ட திருமணம் கூடிவரும். சகோதர வகையில் ஏற்படக்கூடிய பிரச்னைகளைச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யவும். தந்தைவழி உறவினர்களால் சிற்சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களால் உடல் அசதி உண்டாகும். பயணங்களின்போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதற்குக் கூடுதலாக உழைக்கவேண்டி வரும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் நிதானம் அவசியம். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். போட்டியாளர்களால் தொல்லைகள் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

கலைஞர்களுக்குப் புகழும் பாராட்டும் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாத முடிவில் முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.

மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி ஏற்படும். முயற்சி செய்து படிப்பவர்களுக்கு மதிப்பெண் உச்சத்தைத் தொடும்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தடைபட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.

கும்பம்:
Kumbam Rasi

3-ல் சூரியன்; 3,4-ல் சுக்கிரன்; 6-ல் ராகு; 9-ல் குரு(வ); 11-ல் சனி; 11,12-ல் செவ்வாய்; 12-ல் கேது; 2,3-ல் புதன்
கும்பராசி அன்பர்களே! சூரியன், சுக்கிரன், குரு, ராகு, சனி மாதம் முழுவதும், ஏப்ரல் 30 வரை செவ்வாய் மற்றும் புதனும் சுபபலன்களைத் தரவிருக்கிறார்கள். இந்த மாதம் முழுவதும் சிறப்பான வளர்ச்சி கிடைக்கும். செயலில் வெற்றி, பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் விருத்தியைக் காணலாம். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களுடனான உறவு சுமுகமாகக் காணப்படும். குடும்பத்தோடு புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்குப் பொன், பொருள் ஆகியவை சேரும். கணவன் – மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பெண்களால் ஆதாயம் உண்டாகும். விருந்து, விழாக்களில் கலந்துகொள்வீர்கள். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாய்வழி உறவுகளால் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் உண்டாகும். தந்தையின் ஆலோசனை பயனுள்ளதாக இருப்பதுடன், முன்னேற்றத்துக்கும் வழிகாட்டுவதாக அமையும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் இடையூறும், அரசு வகையில் அனுகூலமற்ற போக்கும் மறையும். திடீர் பணவரவு இருக்கும். போட்டிகளைச் சமாளித்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.

பணியாளர்கள் பணியில் திருப்தி காண்பர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். மாதத் தொடக்கத்தில் வேலையில் கவனமாக இருக்கவும். எதிர்பார்ப்பு நிறைவேறும். திடீர் வருமானத்துக்கு வாய்ப்பு உண்டு.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். புகழ், பாராட்டு கிடைக்கும். சிலருக்கு அரசிடமிருந்து விருது வரலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு நடக்கவும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

பெண்களுக்குக் குடும்பத்தில் ஆனந்தம் அதிகரிக்கும். தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

கும்ப ராசிக்கான பொதுவான குணங்களை பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்

மீனம்:
Meenam Rasi

2-ல் சூரியன்; 2,3-ல் சுக்கிரன்; 5-ல் ராகு; 8-ல் குரு(வ); 10-ல் சனி; 10,11-ல் செவ்வாய்; 11-ல் கேது; 1,2-ல் புதன்
சுக்கிரன், செவ்வாய், கேது, மே 2 முதல் புதன்
மீனராசி அன்பர்களே! சுக்கிரன், செவ்வாய், கேது ஆகியோர் மாதம் முழுவதும், மே 2 முதல் புதனும் அனுகூலமான பலன்களைத் தரவிருக்கிறார்கள்.பொருளாதார வளம் கூடும். உடல்நலம் மேம்படும். சிலருக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயர் மறைந்து, செல்வாக்கு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் மனதில் உற்சாகம் ஏற்படும். பகைவர்களால் இருந்து வந்த இடையூறுகள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பழுதான பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். அரசாங்கக் காரியங்களில் பொறுமை அவசியம். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். ஆனால், குரு 8-ல் மறைந்திருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூடுமானவரை தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து, வலிய வந்து மன்னிப்புக் கேட்பார்கள். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்குப் பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பாக இருக்கும். ஆனால், போட்டியாளர்களால் இடையூறு வரலாம். கணக்குகளைச் சரியாக வைத்துக்கொள்ளவும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், இதுவரை இருந்து வந்த அவப்பெயர் நீங்கி, செல்வாக்கு அதிகரிக்கும். வீண் மனக்கவலை மறையும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.

கலைஞர்களுக்குப் புகழ், பாராட்டு, புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் ஆதாயம் பெறலாம்.

மாணவர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது சிரத்தை எடுத்துப் படித்தால்தான் பலன் கிடைக்கும். ஆசிரியரின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.

பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்குச் சென்று வருவர். வாழ்க்கையில் ஆனந்தம் அதிகரிக்கும். வேலை பார்ப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு நல்ல லாபம் இருக்கும்.

வார பலன், மாத ராசி பலன் சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு விதமான தகவல்களை பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்..

- Advertisement -
SOURCEvikatan