- Advertisement -

மேஷம்:

பிற்பகலுக்கு மேல் திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் உதவியால் உற்சாகமாக முடிப்பீர்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -

உங்கள் ஆலோசனைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் தேவையறிந்து நீங்கள் கேட்காமலேயே மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

இந்த வார ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

மிதுனம்:

- Advertisement -

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. திய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

கடகம்:

சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். தெய்வப் பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

சிம்மம்:

- Advertisement -

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும். ஒரு சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கடன் வாங்கவும் நேரிடும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உயர் பதவியில் இருப்பவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கன்னி:

உற்சாகமான நாள். காலையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

துலாம்:

அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் நிறைவேறும். தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உயர் பதவியில் இருப்பவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்:

வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும். சகோதரர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தியைக் கேட்பீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை ஏற்படும்.

தனுசு:

இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். வராது என்று நினைத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும்.. உற்சாகமான நாள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் அனுகூலம் உண்டாகும்.

மகரம்:

அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத சோர்வு உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கும்பம்:

தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும். தேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். உங்கள் ஆலோசனைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மீனம்:

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். பிற்பகலுக்கு மேல் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி இருக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உயர் பதவியில் இருப்பவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

உங்களுடைய இந்த நாள் இந்த ராசி பலன் மூலம் மேலும் சிறப்படையும் என்று நம்புகிறோம்.

- Advertisement -