- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யாரிடமும் அதிகமாக பேசுவதை தவிர்க்கவும். தேவையற்ற பேச்சுக்கள் வீண் கோபத்தை உருவாக வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களின் திறமைக்கு முன்னுரிமை கொடுக்கும் நீங்கள் இன்றைய நாளில் அமைதியைக் கடைபிடிப்பது உத்தமம். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் குதூகலம் காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கனிவான பேச்சு மன அமைதிக்கு வழிவகுக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர் வரும் அனைத்து பிரச்சினைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை மதிப்புடன் நடத்துவார்கள். நீண்டநாள் தடைப்பட்ட காரியங்கள் சிலவற்றை செய்து காட்டுவீர்கள். பெண்களுக்கு தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. நண்பர்களின் ஆதரவு பக்க பலமாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றிக்கான ஒளியை காண்பீர்கள். இறை வழிபாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டால் மன அமைதி பெறலாம். வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சுபகாரிய முயற்சிகளில் கால தாமதம் ஏற்படலாம். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மன சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க போராடுவீர்கள். உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தினால் நலம் பெறலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. நீண்டநாள் இழுபறியில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் ரீதியான முன்னேற்றம் மந்த நிலை இருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் புரிதல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு செயலை தொடங்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உங்களுடைய முன்கோபத்தால் சில இழப்புகளை சந்திக்க நேரலாம் என்பதால் நிதானம் தேவை. தாராள தன வரவு வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய உதவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. பல நாட்களாக செய்ய வேண்டிய வேலையை ஒரு வழியாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையான ஓய்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருக்கும். குடும்பத்தில் திடீர் பணவரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஏற்றம் பெறலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்தபடி எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். நண்பர்கள் பக்கபலமாக தக்க சமயத்தில் இருப்பார்கள். தாய்வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. வாகன பயணத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. பெண்களுக்கு கவலைகள் நீங்கி புத்துணர்வு அளிக்க கூடிய சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு உங்களுடைய வெற்றிக்கு உதவியாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி உறவு மேம்படும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுதல் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. உங்கள் உடன் இருப்பவர்களே உங்களுடைய பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -
- Advertisement -