- Advertisement -

மேஷம்:

தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

- Advertisement -

ரிஷபம்:

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஆனால், பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். பேசும்போது பொறுமை அவசியம். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.

மிதுனம்:

புது முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிற்பகலுக்கு மேல் ஏற்படும் திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

கடகம்:

எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணை வழியில் கேட்ட உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்

சிம்மம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணியின் காரணமாக சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.

- Advertisement -

கன்னி:

உற்சாகமான நாள். கணவன் – மனைவியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் உஷ்ணத்தின் காரணமாக வயிற்று வலி ஏற்படக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

துலாம்:

காலையில் இருந்தே பரபரப்பாகக் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச் சுமையின் காரணமாக நேரத்துக்குச் சாப்பிடமுடியாது. வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். வாழ்க்கைத் துணை வழியில் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.

விருச்சிகம்:

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

தனுசு:

மனம் உற்சாகமாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர், நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக அமையும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் பெருமை உண்டாகும்.

மகரம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளைத் தொடங்கினால் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும்.
- Advertisement -

கும்பம்:

காரிய அனுகூலம் உண்டாகும். தாய் வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

மீனம்:

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -
Published by