- Advertisement -
சமையல் குறிப்புகள்

வெயிலுக்கு உடல் சூட்டை தணிப்பதற்கு ஆரோக்கியமான இந்த கம்பு உப்புமாவை செய்து சாப்பிடுங்கள். உங்கள் உடம்பில் உள்ள சூடு பிரச்சனை அனைத்தும் நொடிப்பொழுதில் குணமாகிவிடும்

- Advertisement -

இப்பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வீட்டில் இருந்தாலும் உடலில் சூடு தன்மை அதிகமாகிறது. அதிலும் வெளியில் சென்று வருபவர்களுக்கு இன்னும் அதிகமாக சூடு பிடித்துக் கொள்கிறது. இதனால் வயிற்று வலி, அஜீரணக் கோளாறு, அடி வயிறு வலிப்பது, பெண்களுக்கு வெள்ளைப்படுதல், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மலச்சிக்கல் தொல்லை இது போன்ற அனைத்து விதமான பிரச்சினைகளும் ஏற்படுகிறது. ஆகவே உடல் சூட்டை தணிப்பதற்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். பழ வகைகள் சாப்பிட வேண்டும். அதிலும் நாம் உண்ணும் உணவு இப்பொழுது இருக்கும் உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அதற்காக வாரத்தில் இரண்டு முறையாவது கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். எனவை காலை உணவாக கம்பு வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான உப்புமாவை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
கம்பு – ஒரு கப், வெங்காயம் – 3, பச்சை மிளகாய் – 6, கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, எண்ணெய் – 6 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கப் கம்பை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்திற்கு அரைக்க வேண்டும். பிறகு இவற்றை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, கடாய் சூடானதும் சலித்து வைத்த கம்பு மாவை சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் மறுபடியும் கடாயை அடுப்பில் மீது வைத்து 6 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும் பிறகு ஒரு குத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கி விட வேண்டும்.

- Advertisement -

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் ஒன்றரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் ஒரு டம்ளர் கம்பிற்க்கு இரண்டு டம்ளர் தண்ணீர் என அளவாக தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் வரை தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும்.

பிறகு தண்ணீர் நன்றாக கொதித்ததும் தட்டை திறந்து, வறுத்து வைத்துள்ள கம்பை சேர்த்து கலந்து விடவேண்டும். சிறிது நேரத்தில் இவை அனைத்தும் நன்றாக வெந்து கம்பு உப்மா தயாராகிவிடும். இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விட்டு அனைவருக்கும் பரிமாறிக் கொடுக்க வேண்டும்.

- Advertisement -