- Advertisement -

மார்கழி சனிக்கிழமை உக்கிர தெய்வ வழிபாடு

- Advertisement -

வாழ்வில் தாங்கவே முடியாத பிரச்சனைகள் சில பேருக்கு இருக்கும். இதைத்தான் உக்கிரமான பிரச்சனைகள் என்று சொல்லுவோம். இவ்வளவு குளிரும் மார்கழி பனியில் கூட, தாங்க முடியாத எரிச்சலூட்டும் பிரச்சனைகள், அந்த வரிசையில் எதிரி தொல்லை இருக்கலாம். வீட்டில் கெட்ட சக்திகளின் ஆதிக்கம், கண் திருஷ்டி பிரச்சனை, எதிரிகளால் தொல்லை, ஏவல் பில்லி சூனியம் இதுபோன்ற பிரச்சனைகள் அடங்கும்.

அதேபோல கடனை கொடுத்திருப்போம், பணத்தை அடுத்தவர்களை நம்பி கொடுத்திருப்போம். ஆனால் அது திரும்பவும் நம் கைக்கு வராமல் கஷ்டத்தை கொடுக்கும். உதவிக்காக பணத்தையும் கொடுத்து புது புது எதிரிகளை சம்பாதிக்க கூடியவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். காரணம் கடனை கொடுத்துவிட்டு,  திருப்பி கேட்டால் சண்டை, சாபம் வந்துவிடுகிறது. பாவம் வந்து சேருகிறது. கடன் கொடுத்த பாவத்திற்கு கஷ்டத்தையும் நாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை.

- Advertisement -

இப்படி நீங்கள் ஏதேனும் பண பிரச்சனையில் சிக்கி இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்கள் பணம் உங்கள் கையை வந்து சேரும். கடன் வாங்கி தவிப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். கடனை சீக்கிரம் திருப்பி அடிக்கக்கூடிய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் பொய் சொல்லவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை, உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்னும் பட்சத்தில் இந்த பரிகாரத்தை நாளைய தினம் செய்தால் நிச்சயமாக உங்கள் வேண்டுதலுக்கு உடனடியாக ஒரு பதில் இறைவனிடம் இருந்து கிடைக்கும்.

நாளைய தினம் மார்கழி மாதம் 20ஆம் தேதி. மார்கழி மாத சனிக்கிழமை பஞ்சமி திதியும் சேர்ந்து இருக்கிறது. நாளை மார்கழி மாதத்தில் வந்திருக்கக்கூடிய சதயம் நட்சத்திர நாள். இந்த நாளில் உக்கிர தெய்வ வழிபாட்டை யாரும் தவற விடாதீங்க.

- Advertisement -

இன்றைய நாள் உக்கிர தெய்வ வழிபாட்டிற்கு மிக மிக உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. நாளை தினம் கட்டாயம் அனைவரும் வாராகி வழிபாடு செய்ய வேண்டும் நிச்சயம் நல்லது நடக்கும். இதோடு சேர்த்து இன்னும் சில பல உக்கிர தெய்வங்களையும் நாளைய தினம் நம் வழிபாடு செய்யலாம்.

துர்க்கை அம்மன், சரபேஸ்வரர், நரசிம்மர், பிரத்தியங்கரா, அங்காள பரமேஸ்வரி என்று இந்த தெய்வங்களையும் வழிபாடு செய்வது சிறப்பு. நாளைய தினம் உங்களுக்கு நேரம் இருக்கும்போது, இந்த தெய்வங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று விளக்கு போடுங்கள். உங்கள் வீட்டு பக்கத்தில் எந்த உக்கிர தெய்வங்கள் இருந்தாலும் அந்த தெய்வத்தை சென்று வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

அந்த கோவிலில் ஐந்து நிமிடம் அமர்ந்து உங்கள் பிரச்சனைகளை கடவுளிடம் சொல்லி வழிபாடு செய்யலாம். இந்த தெய்வங்களை எல்லாம் பெரும்பாலும் எல்லோரும் வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய மாட்டார்கள். இந்த தெய்வங்களின் நாமங்களை சொல்லி வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தாலும் நல்லதே நடக்கும்.

சனிக்கிழமை உக்கிர தெய்வ வழிபாடு

சரி, இந்த கோவிலில் இருக்கும் தெய்வங்களுக்கு அபிஷேகத்திற்கு என்ன பொருளை வாங்கி கொடுத்தால் நம்முடைய உக்கிரமான கஷ்டங்கள் தனியும் என்பது உங்களுக்கு தெரியுமா. எலுமிச்சம்பழம், எலுமிச்சம்பழச் சாறை கொண்டு இந்த தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் உங்களுக்கு இருக்கும் உக்கிர பிரச்சனைகள் எல்லாம் தணியும்.

பெரிய அளவில் பிரச்சனை கோர்ட் கேஸ் வழக்கு, தகராறு, சிக்கலாக போய் சிக்கிக் கொண்டீர்கள். அதிலிருந்து விடுபட வேண்டும் என்றால், நாளைய தினம் இந்த தெய்வங்களை வழிபாடு செய்யுங்கள். உங்களால் முடிந்த எலுமிச்சம் பழத்தை வாங்கி உக்கிர தெய்வங்கள் வாசம் செய்யும் கோவிலுக்கு தானமாக கொடுங்கள்‌.

கோவிலில் காலையில் அபிஷேகம் நடக்கும் அல்லவா. அந்த அபிஷேகத்திற்கு எலுமிச்சம் பழங்களை வாங்கிக் கொண்டு போய் குருக்களிடம் தானமாக கொடுக்க வேண்டும். இந்த பழத்திலிருந்து சாறு பிழிந்து அபிஷேகத்திற்கு பயன்படுத்தும் படி சொல்லுங்கள். சிலபேர் வீட்டிலேயே வாராகி வழிபாடு செய்வார்கள். அந்த வாராஹிக்கு எலுமிச்சம்பழச் சாறை கொண்டு அபிஷேகம் செய்து நீங்களாகவே வீட்டில் வழிபாடு செய்தாலும் நன்மையை கொடுக்கக்கூடிய விஷயமாகத்தான் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: மார்கழி சனிக்கிழமை பரிகாரம்

பக்கத்தில் இருக்கும் துர்க்கை அம்மன் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு இந்த எலுமிச்சம் பழங்களை வாங்கி கொடுத்தாலும் போதும். நாளைய தினம் சக்தி வாய்ந்த இந்த நாளில் வழிபாட்டை தவற விடாதீங்க. இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் வழிபாடு உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -