மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் வேகமாக கடந்து நகர்ந்து சென்று கொண்டே இருக்கிறது. நாளை மார்கழி 20. இந்த வருட மார்கழி மாதத்தை தவற விட்டவர்கள் இறைவழிபாட்டிற்காக பெருமாள் வழிபாட்டிற்காக ஹனுமன் வழிபாட்டிற்காக அடுத்த வருடம் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆகவே இனி வரும் மார்கழி மாத நாட்களை யாரும் தவற விடாதிங்க.
ஒவ்வொரு நாளும் சக்தி வாய்ந்த நாட்களாக கருதப்படும் இந்த மார்கழி மாதத்தில், சனிக்கிழமையில் செய்யப்போகும் ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். மிக மிக எளிமையான பரிகாரம். இது கொஞ்சம் பழைய பரிகாரமாக இருந்தாலும் இந்த பரிகாரத்திற்கு பவர் கொஞ்சம் அதிகம் தான்.
மார்கழி சனிக்கிழமை பரிகாரம்
எப்பவும் போலத்தான் மார்கழி மாதம் நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, வாசல் தெளித்து கோலம் போட்டு விளக்கு ஏற்றி வைக்கவும். கொஞ்சமாக சிரமம் பார்க்காமல் அந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் தயிர் சாதம் செய்து விடுங்கள். இது பெருமாளுக்கும் அனுமனுக்கும் ரொம்ப ரொம்ப பிடித்தமான நெய்வேத.
முடிந்தால் அந்த தயிர் சாதத்தில் கொஞ்சம் மாதுளைபழ முத்துக்களை உதிர்த்து தூவி அப்படியே பெருமாள் முன்பு கொண்டு வந்து விடுங்கள். மனநிறைவாக பிரார்த்தனை செய்துகொண்டு வெறும் வெள்ளை காகிதத்தை எடுத்து அதில் நான்கு பக்கமும் மஞ்சளை தடவி ஒரு பேனாவை எடுத்து கையில் வைத்துக் கொள்ளுங்கள். “ஸ்ரீ ராம ஜெயம்” 108 முறை எழுதுங்கள்.
உங்கள் வாழ்வில் எவ்வளவு பெரிய துன்பம் இருந்தாலும் சரி அந்த துன்பம் விலக அந்த ஏழுமலையானை, அந்த பெருமாளை மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அனுமனையும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த பேப்பரை மடித்து பெருமாள் படத்திற்கு பின்பு வைத்து விடுங்கள். அவ்வளவுதான் நீங்கள் பெருமாளிடம் வைத்த கோரிக்கை அடுத்த மார்கழி மாதத்திற்குள் நிச்சயம் நிறைவேறும். என்ன மாதிரி வேண்டுதலை வைக்கலாம்.
என்ன வேண்டுதல் வேண்டும் என்றாலும் கேட்கலாம். இறைவனிடம் கேட்பதற்கு என்ன தயக்கம். திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, திருப்பதி பெருமாளே உன்னை காண நான் வரவேண்டும், கடன் சுமை குறைய வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், வருமானம் பெருக வேண்டும் என்று என்ன கேட்டாலும் அந்த இறைவன் உங்களுக்கு கொடுத்து விடுவான். நிறைய பேருக்கு திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
இதையும் படிக்கலாமே: 4-1-2024 வளர்பிறை பஞ்சமி திதி பாடல்
ஆனால் நேரமும் காலமும் கை கொடுக்காது. அந்த பெருமாள் உங்களை திருப்பதிக்கு வர வைக்க வேண்டும் என்றாலும், பிரார்த்தனை வைக்கலாம். கூடிய சீக்கிரம் திருப்பதி பாலாஜியை காணக்கூடிய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். இந்த எளிமையான பரிகாரத்தை மார்கழி மாத சனிக்கிழமை செய்பவர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.