- Advertisement -

05-06-2024 வைகாசி மாத கிருத்திகை வழிபாடு

- Advertisement -

வெற்றியை கொடுக்கும் கடவுள் என்றாலே அது முருகப்பெருமான்தானே. உங்களுக்கு வாழ்க்கையில் தொடர் தோல்விகள் இருந்தால், வாழவே பிடிக்கவில்லை, இந்த வாழ்க்கையே வெறுத்து விட்டது என்பவர்கள் எல்லாம், நாளைய தினம் முருகப் பெருமானை நம்பிக்கையோடு வழிபாடு செய்யுங்கள். உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்ல முருகப்பெருமான் உங்களுடனே வருவார்.

அதில் எந்த சந்தேகமும் கிடையாது. நாளை வைகாசி மாதம் வரவிருக்கும் கார்த்திகை நட்சத்திரத்தன்று, முருகப்பெருமானை எந்த மந்திரத்தை சொல்லி எப்படி வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வைகாசி மாத கிருத்திகை வழிபாடு

வெற்றி கிடைக்க வேண்டும், சொந்த வீடு கட்ட வேண்டும், கடன் சுமையிலிருந்து வெளிவர வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும், கணவன் மனைவி ஒற்றுமை வேண்டும், குடும்பத்தில் சந்தோஷம் வேண்டும் என்றால் நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய ஒரே கடவுள், முருகக் கடவுள் தான். நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு விரதத்தை தொடங்குங்கள்.

உங்களுடைய வீட்டில் வேல் இருந்தால் நாளை அதற்கு அபிஷேகம் செய்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். அதே சமயம் முருகப்பெருமானுக்கு உரிய வெற்றிலை தீபத்தை நாளை ஏற்றுவது மிக மிக சிறப்பான பலனை தரும். வெற்றிலை தீபம் வெற்றியை மட்டுமே உங்களுக்கு கொடுக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

6 வெற்றிலை வைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து முருகப்பெருமானை நினைத்து இந்த தீபத்தை ஏற்றவும். முடியாதவர்கள் வருத்தப்படாதீர்கள். உங்கள் வீட்டில் சாதாரணமாக ஏற்றும் விளக்கை ஏற்றி முருகப் பெருமானை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, ‘ஓம் ஸ்ரீம் சம் சரவணபவாய நமஹ’ என்ற இந்த மூல மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.

முருகா எனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை வையுங்கள். வாழ்க்கையில் இருக்கும் கஷ்டமெல்லாம் நீங்கி முருகப்பெருமான் உங்களுக்கு வெற்றியை கொடுத்து விடுவார். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. உங்களுக்கு வாழ்க்கையில் சீக்கிரம் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று ஆசை இருந்தால், பின் சொல்லக்கூடிய இந்த பரிகாரத்தை செய்யுங்கள். மேலே சொன்ன வழிபாட்டோடு சேர்த்து இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

ஒரு சிவப்பு துணியில் ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பை வைத்து, ஒரு சிவப்பு நிற அரளி பூவை வைத்து, முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை முருகப்பெருமானின் பாதங்களில் வைத்துவிட்டு முருகா எனக்கு சீக்கிரம் சொந்த வீடு கட்டும் பாக்கியத்தை கொடு என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

மூன்று நாள் கழித்து இந்த முடிச்சை அவிழ்த்து துவரம் பருப்பை எடுத்து பசு மாட்டிற்கு போட்டு விடுங்கள். வழிபாடு இவ்வளவுதான் துவரம் பருப்பை வைத்து வீடு கட்ட வேண்டும் என்ற பிரார்த்தனை செய்தால் உங்களுடைய வேண்டுதலை முருகப்பெருமான் சீக்கிரம் நிறைவேற்றி வைப்பார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் சிவ மந்திரம்

உங்க வீட்டு பக்கத்தில் ஏதாவது ஒரு அனாதை ஆசிரமமோ, முதியோர் இல்லமோ இருந்தால், 5 கிலோ துவரம் பருப்பை வாங்கி தானம் கொடுத்து விடுங்கள். நாளைய தினமே கையோடு இந்த தானத்தையும் செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -