- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் சிவ மந்திரம்

கடன் தீர்க்கும் சிவ மந்திரம்

- Advertisement -

இன்று செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பிரதோஷ நாள். கடன் பிரச்சனை தீருவதற்கு இந்த நாளை யாரும் தவற விடாதிங்க. 4.6.2024 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வந்திருக்கும் இந்த பிரதோஷ நாளில் செய்ய வேண்டிய சிறப்பு பூஜையை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். கோவிலுக்கு செல்பவர்கள், கோவிலிலேயே அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லி கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் பின் சொல்லக்கூடிய இந்த வழிபாட்டை செய்யும் போது கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும். அதே சமயம் கடன் சுமையிலிருந்து வெளிவரக்கூடிய வாய்ப்புகளையும் அந்த எம்பெருமான் உங்களுக்கு காட்டி கொடுப்பார். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை படிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ந்து எங்களுடன் பயணம் செய்யலாம்.

- Advertisement -

கடன் தீர்க்கும் பிரதோஷ வழிபாடு

பொதுவாகவே பிரதோஷ நாளில் மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை பிரதோஷ நேரமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் 20 நிமிடம் நேரத்தை ஒதுக்கி இந்த வழிபாட்டை செய்து கொள்ளுங்கள். ஒரு பித்தளை தட்டு எடுத்துக் கொள்ளவும். அதன் மேலே கொஞ்சமாக கல் உப்பை பரப்பிக் கொள்ளுங்கள்.

ஜவ்வாது தூள் சிறிதளவு அந்தக் கல்லுப்புக்கு மேலே தூவி விட வேண்டும். பிறகு ஒரு மண் அகல் விளக்கை அந்த கல்லுப்பு பரப்பிய தட்டின் மேல் வைத்து, நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி விடுங்கள். அவ்வளவுதான் இந்த விளக்குக்கு பக்கத்தில் 3 வில்வ இலைகள் வைத்தால் போதும். பிறகு சிவபெருமானை மனதார நினைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் அண்ணாமலையாரின் படம் இருந்தாலும் சரி, சிவலிங்கம் இருந்தாலும் சரி அதற்கு பூஜைகளை வழக்கம் போல செய்து கொள்ளுங்கள். சிவலிங்கம் இருந்தால் இன்று பிரதோஷ நேரத்தில் அதற்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழிபாட்டை எல்லாம் முடித்துவிட்டு இந்த விளக்குக்கு முன்பாக அமர்ந்து ‘சிங்வம் நமசிவாய’ என்ற இந்த மந்திரத்தை மனதார 108 முறை நம்பிக்கையோடு உச்சரிக்க வேண்டும்.

இந்த மந்திரத்தை உச்சரித்த நொடி முதல் என்னுடைய கடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்யுங்கள். வழிபாடு செய்யும்போது இரண்டு வாழைப்பழமாவது சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள். காலையிலிருந்து நீங்கள் விரதம் இருப்பவர்களாக இருந்தால் மாலை இந்த வழிபாட்டை முடித்துவிட்டு இந்த நெய்வேத்தியத்தை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

- Advertisement -

விரதம் இல்லாதவர்களும் இந்த வழிபாட்டை செய்யலாம். எந்த தவறும் கிடையாது. கடன் பிரச்சனைக்கு முழுக்க முழுக்க முழுமையான தீர்வை காட்டக்கூடிய சக்தி இந்த வழிபாட்டிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு முழுவதும் அந்த கல்லுப்பு தட்டு பூஜை அறையில் இருக்கட்டும்.

நாளை புதன்கிழமை காலை குளித்தவுடன், முதல் வேலையாக ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்து அந்த கல்லுப்பை அந்த தண்ணீரில் போட்டு கரைக்க வேண்டும். இந்த கல் உப்பு கரைவது போல என்னுடைய கடனும் கரைந்து போக வேண்டும் எம்பெருமானே, ஈசனே என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: குடும்ப சண்டைகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழ பரிகாரம்

உங்கள் கடன் பிரச்சனை படிப்படியாக குறைவதை கண்கூடாக பார்ப்பீர்கள் சிவபெருமானின் மீது பாரத்தை போட்டு இந்த வழிபாட்டை முடித்துவிட்டு உடனடியாக கடன் தீர்க்கும் முயற்சிகளில் நீங்கள் தான் ஈடுபட வேண்டும் வெறுமனே இருந்தால் பரிகாரம் எந்த பலனையும் கொடுக்காது, என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்