- Advertisement -

வளமான வாழ்க்கை அருளும் வளர்பிறை பஞ்சமி பரிகாரம்

- Advertisement -

அம்பாளுக்கு சிறப்பு மிகுந்த நாட்களாக கருதப்படக் கூடிய நவராத்திரி தினத்தில் வரக்கூடிய பஞ்சமி திதி என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக திகழ்கிறது. இந்த பஞ்சமி திதி என்பது அக்டோபர் மாதம் 7ஆம் தேதி காலை 7:22 மணிக்கு ஆரம்பித்து அக்டோபர் மாதம் 8ஆம் தேதி காலை 8 மணிக்கு நிறைவடைகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு வளமான வாழ்க்கை உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வளர்பிறை பஞ்சமி பரிகாரம்

வளர்பிறை பஞ்சமி திதி என்பது மிகவும் சிறப்புக்குரிய திதியாக கருதப்படுகிறது. இந்த திதி வரும் நாளில் வாராகி அம்மனிடம் நாம் எதை கேட்டாலும் அவள் வாரி வழங்குவாள் என்று கூறப்படுகிறது. இந்த தினத்தில் வாராஹி அம்மனை நினைத்து சுப காரிய பேச்சுக்களை ஆரம்பித்தால் அந்த சுபக்காரிய பேச்சுக்கள் வெற்றிகரமாக நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த வளர்பிறை பஞ்சமி திதியில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரம்

- Advertisement -

இந்த பரிகாரத்தை இரவு 9 மணிக்கு மேல் செய்யலாம். அப்படி இரவில் செய்ய முடியாது என்பவர்கள் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்தில் கூட செய்யலாம். இதற்கு ஒரு சிவப்பு நிற துணி வேண்டும். சிவப்பு நிற துணி இல்லாத பட்சத்தில் வெள்ளை நிற துணியில் குங்குமம் மற்றும் பன்னீரை கலந்து நன்றாக தடவி நிழலில் காய வைத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம். பஞ்சமி திதியில் எப்பொழுதும் எப்படி வாராகி அம்மனை வழிபாடு செய்வோமோ அதே முறையில் வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.

வழிபாடு அனைத்தும் செய்து முடித்த பிறகு தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். நாம் எடுத்து வைத்திருக்கும் சிவப்பு நிற துணியில் ஒரு ஐந்து ரூபாய் நாணயம், இரண்டு நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஏலக்காய், ஒரு துண்டு பச்சை கற்பூரம் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து 5 முடிச்சுகள் போட வேண்டும். இப்படி ஐந்து முடிச்சுகள் போடும்பொழுது பணவரவு அதிகரிக்க வேண்டும், செல்வநிலை உயர வேண்டும் என்ற நேர்மறையான வார்த்தைகளை கூறிக் கொண்டே போட வேண்டும்.

- Advertisement -

இப்படி போட்டு முடித்துவிட்டு இந்த முடிச்சை தரையில் வைக்காமல் உங்களுடைய இடது கையிலேயே வைத்துக் கொண்டு இந்த முடிச்சிக்கு வலது கை மோதிர விரலால் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். சாம்பிராணி தூபம் போட்டிருப்போம் அல்லவா அந்த சாம்பிராணி தூபத்தில் இந்த முடிச்சை நன்றாக காட்ட வேண்டும். பிறகு இந்த முடிச்சை உங்களுடைய இடது கையில் வைத்துக்கொண்டு கற்பூர ஆராதனை காட்டி முடித்துவிட்டு அந்த கற்பூர புகையிலும் இந்த முடிச்சை நன்றாக அனைத்து பக்கங்களிலும் காட்ட வேண்டும்.

இப்படி காட்டி முடித்துவிட்டு வராகி அம்மனின் பாதத்தில் இந்த முடிச்சை வைத்து விடுங்கள். வீட்டில் வராகி அம்மனின் சிலையோ படமோ இல்லை என்னும் பட்சத்தில் வாராஹி அம்மனை நினைத்து தீபம் ஏற்றி வைத்திருப்போம் அல்லவா அந்த தீபத்திற்கு முன்பாக இதை வைத்து விடவேண்டும். வெறும் தரையில் வைக்கக்கூடாது. ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்து அதற்கு மேல் தான் இந்த முடிச்சை வைக்க வேண்டும்.

- Advertisement -

வழிபாடு அனைத்தும் நிறைவு செய்த பிறகு கற்பூரம் முழுவதுமாக எரிந்து முடித்த பிறகு விளக்கை குளிர வைப்போம் அல்லவா அப்பொழுது இந்த முடிச்சை எடுத்து எந்த இடத்தில் நாம் பணம் வைத்து புலங்குவோமோ அந்த இடத்தில் வைத்து விட வேண்டும். இது ஒரு மாத காலம் அப்படியே இருக்கட்டும். அடுத்த வளர்பிறை பஞ்சமி வரும் பொழுது இதிலிருக்கக் கூடிய நாணயத்தை எடுத்து சுப செலவுகளை செய்வதற்கு உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏலக்காயை கால்படாத இடத்தில் போட்டுவிட்டு மறுபடியும் புதிதாக இதே போல் செய்து வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:முன் ஜென்ம பாவங்கள் தீர செய்ய வேண்டிய தானம்!

இந்த எளிமையான பண வரவை அதிகரிக்க கூடிய பரிகாரத்தை வளர்பிறை பஞ்சமி தினத்தில் வாராகி அம்மனை நினைத்து முழு மனதோடு செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் வாராகி அம்மனின் அருளால் பணவரவு அதிகரிக்கும், செல்வ செழிப்பு உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -