- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமுன் ஜென்ம பாவங்கள் தீர செய்ய வேண்டிய தானம்!

முன் ஜென்ம பாவங்கள் தீர செய்ய வேண்டிய தானம்!

- Advertisement -

நம் வாழ்க்கையில் ஏற்படும் தீராத தொடர் கஷ்டங்கள் பலவும் முன் ஜென்ம கர்மங்களால் உண்டாவது என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அறிந்தும் அறியாமலும் ஆற்றிய பாவங்களுக்கான வினைகளை அடுத்தடுத்த பிறவிகளிலும் அனுபவிக்க வேண்டியதை கர்ம வினை என்கிறோம். இதிலிருந்து எளிமையாக விடுபட செய்ய வேண்டிய தானம் என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பிறவிகளிலேயே உயர்ந்த பிறவி மனிதப் பிறவி என்று ஆன்றோர்கள் கூறுகின்றனர். அத்தகு உயர்ந்த பிறவியாக இருக்கக் கூடிய இந்த மனித பிறவியில் நாம் செய்யக் கூடிய தானங்களுக்கு தான் பலன்களும் அதிகம் உண்டு. பிரதிபலன்கள் எதுவும் எதிர்பார்க்காமல் செய்யக்கூடிய ஆத்மார்த்தமான தானங்களுக்கு கோடி புண்ணியங்கள் கிட்டும்.

- Advertisement -

நம் குலம் தழைக்கவும் கஷ்ட நிலையில் இருந்து விடுபட்டு, வழி வழியாக தொடர்ந்து சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கவும் முதலில் நம்முடைய கர்ம வினைகளை களையக்கூடிய இந்த ஒரு தானத்தை பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காமல் முழு மனதோடு, ஆத்ம திருப்தியோடு செய்து வர வேண்டும்.

பிறவி பயன் பெற செய்ய வேண்டிய தானம்:

தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம் என்று கூறுவர். மனித பிறவி எடுத்த ஒவ்வொருவரும் வாழ்ந்து முடிக்கும் முன்னர் எந்த அளவிற்கு அடுத்தவருடைய பசியை ஆற்றி இருக்கிறோமோ அதே அளவிற்கு புண்ணியத்தையும் இரட்டிப்பாக பெறலாம். வாழ்க்கையில் ஒரே ஒருவருக்காவது அன்னத்தை தானமாக வழங்கி இருந்தால் போதும் பிறவிப் பயனை அடையலாம்.

- Advertisement -

முன் ஜென்ம கர்மங்கள் தீர செய்ய வேண்டிய தானம்:

அப்படிப்பட்ட அன்னதானத்தை விட சிறந்த தானம் அரிசி தானம் ஆகும். அரிசியில் இருந்து தான் அன்னமும் உண்டாகிறது. அத்தகைய இந்த அரிசியை உண்மையிலேயே கஷ்டப்படுபவர்களுக்கும், மூன்று வேளையும் திருப்தியாக சாப்பிட முடியாதவர்களுக்கும் தேடி சென்று தானம் செய்து வாருங்கள். அரிசி தானம் என்பது நம்மால் செய்ய முடியாத விலை உயர்ந்த தானம் ஒன்றும் அல்ல. அனைவராலும் எளிமையாக செய்யக்கூடிய இந்த ஒரு தானத்திற்கு நம் வாழ்க்கையையே மாற்றக் கூடிய சக்தி உண்டு.

மாதம் ஒரு முறையோ அல்லது வாரம் ஒரு முறையோ உங்களின் வசதிக்கு ஏற்பவும், நேரத்திற்கு ஏற்பவும் கைமாறு எதுவும் எதிர்பார்க்காமல் நீங்களாகவே தேடிச்சென்று எளியவர்களுக்கு அரிசியை தானமாக செய்து வர இதுவரை உங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த அத்தனை கஷ்டங்களும் உங்களை விட்டு படிப்படியாக நீங்குவதை நீங்கள் கண்கூடாக உணர முடியும்.

இதையும் படிக்கலாமே:
சுபகாரிய தடை நீங்க வழிபாடு

வாழ்வில் அதிகம் விரயம் செய்யக்கூடாத பொருள் என்ன?

வாழ்க்கையில் நீங்கள் அதிகம் விரயம் செய்யக்கூடாத ஒரு முக்கிய பொருளாகவும் இந்த அரிசி விளங்குகிறது. அதிக அளவு அரிசியை வீணடிப்பவர்களும், ஒருவர் உங்கள் வீட்டுப் படியேறி வந்து தானம் கேட்டு, அரிசியை வழங்காதவர்களுக்கும் தாங்கள் செய்யும் பாவங்கள் இரட்டிப்பாகும் என்றும் சாத்திரங்கள் குறிப்பிடுகிறது. எனவே அரிசியை அன்னபூரணியாக நினைத்து அதை வீணாக்காமல், பசிப்பவர்களுக்கு தானம் கொடுத்து வந்தால் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் ஒழிந்து நல்ல ஒரு முன்னேற்றத்தை நோக்கி நீங்களும் பயணிக்க பரம்பொருள் அருள் கிட்டும்.

சற்று முன்