- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

வாழ்க்கை போராட்டம் தீர வாராஹி வழிபாடு

- Advertisement -

நாளைய தினம் ஆடி மாதம் தேய்பிறை பிரதோஷம். பிரதோஷம் என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய தெய்வம் சிவபெருமான்தான். பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை நாம் எந்த அளவிற்கு வழிபாடு செய்கிறோமோ அதே அளவிற்கு நரசிம்மரையும் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். அதே பிரதோஷ தினத்தன்று வாராகி அம்மனை நாம் வழிபட்டோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் பல அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்கள் பஞ்சமி, அஷ்டமி போன்ற தினங்களில் தான் வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ தினமும் வாராகி வழிபாடு செய்வார்கள். ஆனால் வாராஹி அம்மனை நாம் தினமும் அதுவும் ஒவ்வொரு திதிக்கு ஏற்றார் போல் வழிபாடு செய்தோம் என்றால் அதற்குரிய பலனை நம்மால் முழுமையாக பெற முடியும். அந்த வகையில் நாளை ஆடி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பிரதோஷம் இந்த தினத்தில் வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதற்கு நாம் வாராகி அம்மனுக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். அதேபோல் நிலை வாசலில் ஒரு பொருளை வைக்க வேண்டும். இவை இரண்டையும் செய்துவிட்டாலே நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய போராட்டங்கள் நீங்கும். அது என்னவென்று இப்பொழுது பார்ப்போம்.

காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்ததும் ஒரு கண்ணாடி கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அளவு கருப்பு உளுந்தை போட்டு நம் வீட்டு நிலை வாசலில் வைத்து விட வேண்டும். இதை மறுநாள் காலையில் எடுத்து பறவைகளுக்கு அல்லது மாட்டிற்கு தானமாக தந்து விட வேண்டும். அதேபோல் பிரதோஷ நேரத்தில் வாராகி அம்மனுக்கு முன்பாக ஒரு சிறிய தட்டில் சந்தனத்தை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு “ஓம் சிவாய நமஹ” என்னும் மந்திரத்தை 111 முறை வாராகி அம்மனை நினைத்து கூற வேண்டும். சிவாய நம என்பது சிவபெருமானுக்குரிய மந்திரம் ஆயிற்றே, இதை வாராகி அம்மனுக்கு எப்படி கூறுவது என்று பலருக்கும் கேள்வி ஏற்படும். வாராகி அம்மனின் நாமங்களில் ஒன்றாக தான் இந்த நாமமும் திகழ்கிறது என்பதால் பிரதோஷ நேரத்தில் இந்த நாமத்தை கூறி வாராகி அம்மனை வழிபடும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே நாளை சொல்ல வேண்டிய சிவ மந்திரம்.

இந்த எளிமையான தீப வழிபாட்டையும் அதே சமயம் நிலை வாசலில் செய்யக்கூடிய பரிகாரத்தையும் முழுமனதோடு வாராகி அம்மனை நினைத்து செய்ய நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களும் போராட்டங்களும் நீங்கும்.

- Advertisement -