பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று அந்த காலத்தில் முன்னோர்கள் ஆசிர்வாதம் செய்வார்கள். இப்போதும் அப்படித்தான் ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது. இந்த 16 செல்வங்களையும் ஒரு மனிதன் ஒரு சேர பெற வேண்டும் என்றால், அவன் அந்த எம்பெருமானின் ஆசி பெற்ற மனிதனாக இருக்க வேண்டும். பிரதோஷ நாள் என்றாலே அது சிவபெருமானுக்கு உரிய நாள்.
சிவனின் ஆசியை பெறக்கூடிய நாள். நம்முடைய தோஷங்களை விளக்கக்கூடிய நாள். நாளைய தினம் வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக் கூடிய பிரதோஷம். வியாழன் என்றால் நம் நினைவுக்கு வருவது குபேரன். அந்த குபேரருக்கே செல்வத்தை வாரி வாரி கொடுத்தவர் ஐஸ்வரேஸ்வரர் தான்.
இந்த ஈசனை வணங்கும் போது நாமும் குபேரனை போல செல்வந்தனாக மாறலாம். நாளைய தினம் பிரதோஷ நேரத்தில் பின் சொல்லக் கூடிய மந்திரத்தை, பின் சொல்லக்கூடிய முறைப்படி உச்சரிப்பவர்களுக்கு 16 வகையான செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பின் சொல்லக் கூடிய வழிபாட்டை பிரதோஷ நேரத்தில் செய்யுங்கள். பிரதோஷ நேரம் மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை. உங்களுடைய வீட்டில் சிவலிங்கம் இருந்தால், அந்த சிவலிங்கத்திற்கு வில்வ தீர்த்தத்தை ஊற்றி அபிஷேகம் செய்து கொண்டே இந்த மந்திரத்தை சொன்னீர்கள் என்றால் பெரிய அளவில் பலன் கிடைக்கும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் எடுத்து, அதில் வில்வ இலைகளை போட்டு அந்த தண்ணீரால் சிவலிங்கத்திற்கு, பிரதோஷ நேரத்தில் அபிஷேகம் செய்வது தான் வில்வ தீர்த்த அபிஷேகம். உங்கள் கையால் இந்த தீர்த்த அபிஷேகத்தை சிவபெருமானுக்கு செய்து கொண்டே பின் சொல்லக்கூடிய சிவ மந்திரத்தை 308 முறை உச்சரித்தால் எவ்வளவு பெரிய கடன், எவ்வளவு பெரிய வறுமையாக இருந்தாலும் அது நீங்கும் என்பது நம்பிக்கை. நீங்கள் குபேரனை விட செல்வ வளத்தில் உயர்வீர்கள்.
பிரதோஷ நேரத்தில் உச்சரிக்க வேண்டிய சிவ மந்திரம்
ஓம் சிவ சிவ சிவ சிவாய நம ஓம் !
இதுதான் மந்திரம். சிவ என்ற வார்த்தைக்குள் அத்தனை சக்தி அடங்கியிருக்கிறது. நாளைய தினம் இந்த சிவ நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு சிவபெருமானின் ஆசி நிச்சயம் கிடைக்கும். ஒருவேளை உங்களுடைய வீட்டில் சிவலிங்கம் இல்லை என்றால் சிவபெருமானின் திருவுருவப்படத்திற்கு முன்பு அமர்ந்து சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து இந்த மந்திர ஜபத்தை உச்சரிக்க வேண்டும்.
அதுவும் உங்களால் முடியாது என்றால் பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலில் சென்று அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். நாளை மாலை வேலைக்கு செல்பவர்கள் கோவிலுக்கு முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் எல்லாம் நின்ற இடத்தில் இருந்தே இந்த மந்திரத்தை சொல்லுங்கள். முடிந்தால் நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலும் இந்த மந்திரத்தை சொல்லலாம் தவறு கிடையாது.
இதையும் படிக்கலாமே: வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு
308 முறை சொல்ல முடியவில்லை என்றாலும் கட்டாயமாக 3 முறை எல்லோராலும் இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியும். குறைந்தபட்சம் மூன்று முறையாவது சொல்லுங்கள் நல்லது. சிவபெருமானின் அருளாட்சி முழுமையாக பெற, நாளைய தினம் குபேர சம்பத்து கிடைக்க வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பிரதோஷ நாளில் இந்த வழிபாட்டை செய்ய நீங்க தவறவே விடாதீங்க. அதுவும் ஆங்கில மாதத்தின் முதல் தேதியே பிரதோஷம் வந்திருக்கிறது. இப்படிப்பட்ட வாய்ப்பு திரும்பவும் அமையாது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் தரவும்.