- Advertisement -

வரலட்சுமி விரதத்தன்று கூற வேண்டிய மந்திரம்

- Advertisement -

அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்க வேண்டும், தீர்க்க சுமங்கலி யோகம் பெற வேண்டும், வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒவ்வொரு பெண்மணிகளும் வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய வரலட்சுமி விரதத்தை மேற்கொள்வார்கள். அன்றைய தினத்தில் விரதம் இருப்பது, வழிபாடுகள் செய்து, வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு மங்களகரமான பொருட்களை கொடுத்து அவர்களிடமிருந்து ஆசிர்வாதமும் வாங்குவார்கள். இப்படி செய்வதன் மூலம் வரலட்சுமி தாயாரிடமே ஆசிர்வாதம் வாங்கிய ஒரு திருப்தி உண்டாகும். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த நாளில் காலையில் எழுந்ததும் நிலை வாசலை திறக்கும் பொழுதும், அதே சமயம் வீட்டில் தீபம் ஏற்றும் பொழுதும் சில மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் வரலட்சுமி தாயே நம் வீட்டிற்கு வந்து குடியேறுவாள். அப்படிப்பட்ட மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வரலட்சுமி விரத மந்திரம்

நம் ஒவ்வொருவரும் காலையில் எழுந்ததும் நம்முடைய வீட்டு நிலை வாசலை திறக்கும் வழக்கத்தை வைத்திருப்போம். அன்றைய காலத்தில் ஒவ்வொருவருடைய வீட்டிலும் இரண்டு வாசல்கள் இருக்கும் தலைவாசல், பின்புற வாசல். பின்புற வாசலை திறந்து பிறகு தலைவாசலை திறப்பார்கள். வீட்டின் இரவு முழுவதும் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் பின் வாசல் வழியாக வெளியே சென்று விடும். பிறகு நிலை வாசலை திறக்க வேண்டும். மகாலட்சுமி வீட்டில் வாசலில் நிற்பாள் என்றும் அவளை வரவேற்கும் விதமாக அவளை நம் உள்ளே அழைக்க வேண்டும் என்றும் ஒரு கூற்று நிலவுகிறது. அதனால் நிலை வாசலை திறக்கும் பொழுது கையில் தொடப்பம் போன்றவற்றை வைத்துக் கொள்ளாமல் கை, கால்களை கழுவிய பிறகு திறக்க வேண்டும்.

- Advertisement -

அந்த வகையில் வரலட்சுமி விரதம் இருக்கக்கூடிய நாளான ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி காலையில் எழுந்து முகம் கை கால்களை கழுவி விட்டு பல் துலக்கி விட்டு நிலை வாசலை திறந்து “வரலட்சுமி வருக வருக” என்று 27 முறை கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்த பிறகு நாம் வாசலை பெருக்கி கோலம் போட்டுக் கொள்ளலாம். இந்த மந்திர வழிபாட்டை பெண்கள் தீட்டு சமயமாக இருந்தாலும் கூறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக வீட்டு பூஜை அறையில் நாம் தீபம் ஏற்றும் பொழுது ஒவ்வொரு தீபத்தை ஏற்றும் பொழுதும் பின்வரும் இந்த வரலட்சுமி மந்திரத்தை கூறி ஏற்றினால் அந்த தீப சுடரொளியில் வரலட்சுமி வந்து குடியேறுவாள் என்று கூறப்படுகிறது. காலையில் தீபம் ஏற்றினாலும் மாலையில் தீபம் ஏற்றினாலும் வரலட்சுமி விரத நாளன்று தீபம் எந்த நேரத்தில் ஏற்றினாலும் இந்த மந்திரத்தை கூற வேண்டும். தீபம் ஏற்றும் பொழுது கூற வேண்டிய மந்திரம் “வரலட்சுமி வருவாய் அம்மா திருமாளின் தேவி கடைக்கண் பாரம்மா அம்மா வரலட்சுமி வருவாய் அம்மா”.

- Advertisement -

இதையம் படிக்கலாமே: சாப்பிடும் சிறந்த திசை

மிகவும் எளிமையான இந்த மந்திரத்தை முழு மனதோடு வரலட்சுமி வீட்டிற்குள் வரவேண்டும் என்று நினைத்து யார் ஒருவர் கூறுகிறார்களோ கண்டிப்பாக அவர்களின் குரல் வரலட்சுமி காதில் விழுந்து நம் வீடு தேடி வருவாள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -