- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசாப்பிடும் சிறந்த திசை

சாப்பிடும் சிறந்த திசை

- Advertisement -

நாம் சாப்பிடும் திசையை பொறுத்து நம்முடைய ஆரோக்கிய நலன்களும் மாறுபடும் என்று சாஸ்திரங்கள் சிலவற்றை எடுத்துரைக்கின்றன. எந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவது சிறந்தது? சாப்பிடும் பொழுது பொதுவாக யாரிடமும் பேசாமல் சாப்பாட்டில் கவனம் இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்ல கேட்டிருப்போம். கையை கீழே ஊன்றக்கூடாது, உண்ணும் உணவு உடம்பில் ஒட்டாது என்று சொல்லுவார்கள். அதுபோல சாப்பிடும் பொழுது, எந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

நாம் சாப்பிடும் போது கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று கூறப்படுகிறது. இந்த திசை இந்திரனுக்கு உரிய திசை என்பதால் உடல் நல கோளாறு இருப்பவர்கள், வயது மூப்பு உடையவர்கள் அமர்ந்து சாப்பிட உகந்த திசையாக கருதப்படுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, நம் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்த திசை உகந்தது என்றும், இந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவதால் நீண்ட ஆயுளும், கல்வியில் நல்ல வளர்ச்சியும் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

மேற்கு திசையை நோக்கி சாப்பிட்டால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மேற்கே ஆட்சி செய்யும் மகாலட்சுமியின் கண் பார்வைபட சாப்பிடும் பொழுது, செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. வியாபாரம் செய்பவர்கள், பெரிய அளவில் வாணிபம் செய்பவர்கள் இந்த திசையில் அமர்ந்து சாப்பிட, லாபம் அதிகரிக்கும். மேற்கு திசை நோக்கி சாப்பிடும் பொழுது உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இருப்பினும் மேற்கு திசையை நோக்கி உறவினர் வீடுகளில் இருக்கும் பொழுது சாப்பிடக்கூடாது, அது அவர்களுடன் பகையை வளர்க்கும் என்றும் நம்பப்படுகிறது.

தெற்கு திசைக்கு அதிபதியாக இருப்பவர் எமதர்மன். எமன் திசை என்பதால் இந்த திசையில் அமர்ந்து சாப்பிடும் போது அழியாத புகழும், நீண்ட ஆயுளும், நல்ல பெயர், செல்வாக்கு அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. நம் மனம் எதிர்மறை சிந்தனைகளை எதிர்த்துப் போராடவும், மனக்குழப்பங்கள் ஏற்படாமல் இருக்கவும் இந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவது நல்ல பலன் கொடுக்குமாம். தெற்கு திசை என்பது நம் முன்னோர்களின் ஆசீர்வாதத்தை தரக்கூடியது என்பதாலும், இந்த திசை நோக்கி சாப்பிடுவது அதிர்ஷ்டம் மிக்கதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

வடக்கு திசையில் நோக்கி சாப்பிடும் பொழுது ஆரோக்கியம் நன்றாக இருக்காது என்ற ஒரு நம்பிக்கை உண்டு. வடக்கு சிவனுக்கு உரிய திசையாக சொல்லப்படுகிறது எனவே வடக்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது. வடக்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடும் பொழுது ஜீரண கோளாறுகள் ஏற்படும். அசௌகரியமான உடல்நிலை இருக்கும். அது மட்டுமல்லாமல் வடக்கு குபேரனின் திசை என்பதால் ஒரு சிலருக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் என்று சொல்கிறார்கள்.

இதையும் படிக்கலாமே:
கடன் தீர்க்கும் உப்பு

கையில் பணம் தங்கவில்லை என்பவர்கள், பணப் பற்றாக்குறையுடன் இருப்பவர்கள் பணத்திற்காக இந்த திசையில் அமர்ந்து சாப்பிடலாம். இது செல்வத்தையும், நவநிதிகளையும் வழங்கும் குபேரனின் திசை என்பதால் அவர்களுக்கு பண ரீதியான பிரச்சினைகளை தீர்க்கும் என்கிற நம்பிக்கையும் உண்டு. குடும்ப தலைவர் இந்த திசையை நோக்கி சாப்பிடும் பொழுது, வீட்டில் மகிழ்ச்சி அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு திசைக்கு ஒவ்வொரு பலன்கள் இருப்பினும் இது நம் நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த ஒரு எளிய விஷயமாகும். அவரவர்களின் உடல் ஆரோக்கியமும், சௌகரியத்தையும் பொறுத்து உங்கள் நம்பிக்கைகளின் அடிப்படையில் நீங்கள் அந்த திசையை பார்த்து அமர்ந்து சாப்பிடலாம்.

சற்று முன்