
பணத்தை வாங்கி வைத்துக் கொண்டு அலைக்கழிப்பவர்கள் இன்றைய காலகட்டத்தில் பெருகி வருகின்றனர். நம் பணம் நம்மிடம் இருக்கும் வரை தான் அதற்கு பாதுகாப்பு! வட்டிக்கு கொடுக்கிறேன் என்று யாரிடமாவது சிக்கிக் கொண்டால் பிறகு டென்ஷனுக்கு பஞ்சம் இருக்காது. கொடுத்த பணம் நம் கைக்கு திரும்ப வருவதற்கு ரொம்பவே எளிதான முறையில் இந்த வெந்தயம் வைத்து தாந்திரீக பரிகாரம் செய்து பயனடையலாம். வராத பணம் வர வெந்தய பரிகாரம் எப்படி செய்வது? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
வராத பணம் திரும்ப வருவதற்கு, கொடுத்த பணம் திரும்ப பெறுவதற்கு, இழந்த பணம் மீட்டுவதற்கு கூட இந்த பரிகாரத்தை செய்வார்கள். தாந்த்ரீக பரிகாரங்களில் ரொம்பவே எளிய பரிகாரமாக இருக்கும் இந்த பரிகாரம், சக்தி வாய்ந்ததும் கூட! எந்த பரிகாரத்தையும் நம்பிக்கையுடன் செய்யும் பொழுது தான் அது முழு பலன் தரும். இப்படி செய்தால் எப்படி நினைத்தது நடக்கும் என்று யோசிக்காமல், நம் பணம் நமக்கு கிடைக்கும் என்று நம்பி இறைவனின் அருளோடு செய்யுங்கள்.
வாஸ்து ரீதியாக சமையலறையின் வடகிழக்கு திசையானது இழந்த சொத்துக்களையும், பணத்தையும் நமக்கு மீட்டுக் கொடுக்கும் திசையாகும். மேலும் நம்மை விட்டு சென்ற பணமும் நம்மிடம் வந்து சேரும். இந்த திசையில் ஒரு கண்ணாடியை வையுங்கள். முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை சிறிய அளவில் வைத்து அதன் முன்னே சிறிய ஒரு கண்ணாடி பவுலில் கொஞ்சம் வெந்தயத்தை போட்டு கொள்ளுங்கள். வெந்தயத்தை அதிகம் வீணாக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒரு ஸ்பூன் அளவிற்கு போட்டால் போதும்.
ஒரு வாரம் வரை அது அந்த திசையிலேயே, அந்த இடத்திலேயே நகராமல் இருக்க வேண்டும். புதிய கண்ணாடிக்கு மஞ்சள், குங்குமம் வையுங்கள். வெந்தயம் பணத்தை திரும்ப கொண்டு வரக் கூடிய தாந்திரீகத்தை செய்யும். இப்போது மனதார கொடுத்த பணம் வர வேண்டும் என்று யாரிடம் பணத்தை கொடுத்தீர்களோ, அவர்களுடைய பெயரை மூன்று முறை உச்சரித்து கண்ணாடியை பாருங்கள். இது போல தினமும் செய்து வர வேண்டும்.
செவ்வாய் கடனுக்கு அதிபதி என்பதால் செவ்வாய்க் கிழமையில் செவ்வாய் ஹோரையில் இதை முதன் முதலில் ஆரம்பியுங்கள். அடுத்த செவ்வாய்க் கிழமை அன்று பவுலில் இருக்கும் வெந்தயத்தை ஓடும் தண்ணீரில் விட்டு விட வேண்டும். ஓடும் தண்ணீர் இங்கு எங்கு இருக்கிறது? என்று யோசிக்க வேண்டாம். அப்படி இல்லாதவர்கள் பாத்திரம் கழுவும் சிங்கில் போட்டு தண்ணீரை ஓட விடுங்கள். ஒவ்வொரு செவ்வாய் அன்றும் வெந்தயத்தை மட்டும் மாற்றி வர வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
தொழிலில் இழந்ததை திரும்பப் பெற வழிபாடு
தினமும் பணம் கொடுக்க வேண்டியவருடைய பெயரை சொல்லி, உங்களுடைய முகத்தை பார்த்து, வெந்தயத்தை இப்படி வைத்து இஷ்ட தெய்வத்திடம் பிரார்த்தனை வைத்தால், கண்டிப்பாக விரைவிலேயே நீங்கள் கொடுத்த பணம் அவர்களே வீடு தேடி வந்து கொடுப்பார்கள் என்பது நம்பிக்கையாகும். நீங்களும் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து இழந்த மற்றும் கொடுத்த பொருட்களையும், சொத்துக்களையும், பணத்தையும் மீட்டு எடுங்கள்.