ஒருவர் தான் செய்யக்கூடிய தொழிலில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் அவருடைய ஜாதகத்தில் பத்தாம் இடம் என்பது சிறப்பாக இருக்க வேண்டும். பத்தாமிடம் தான் தொழில் ஸ்தானம் என்று கூறப்படுகிறது. மேலும் தொழில் காரகனாக திகழக் கூடியவர் சனிபகவான் என்பதால் எவருடைய ஜாதகத்தில் சனி பகவான் சிறப்பாக இருக்கிறார்கள் அந்த ஜாதகக்காரர்கள் தொழிலில் சிறப்பாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. தொழிலில் சிறப்பாக இருப்பதற்கும் தொழிலில் இழந்த செல்வத்தை திரும்பப் பெறுவதற்கும் செய்யக்கூடிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தொழிலில் இழந்ததை திரும்பப் பெற வழிபாடு
புதிதாக தொழிலை தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களும் சரி, தொழிலை சிறப்பாக நடத்த வேண்டும் என்று நினைப்பவர்களும் சரி இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். மேலும் ஒரு காலத்தில் தொழிலில் நன்றாக சிறந்து விளங்கியவர்களும் ஏதோ ஒரு சூழ்நிலையால் நஷ்டத்தை சந்தித்து அந்த தொழிலை செய்ய முடியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இந்த வழிபாட்டை விஜயதசமி நாளன்று செய்வது என்பது மிகவும் சிறப்பு. விஜயதசமி நாளன்று பழனிக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பழைய முருகனை தரிசனம் செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் வன்னிகாசுரர் வதம் என்பது நடைபெறும். இதற்கு பெரிய நாயகி அம்மன் கோவிலில் இருந்து வேல் கொண்டுவரப்பட்டு கோதைமங்கலம் ஊரில் இருக்கின்ற கோதை ஈஸ்வரர் கோவிலில் வன்னிகாசுரவதம் என்பது நடைபெறும். இந்த நிகழ்வை யார் ஒருவர் காண்கிறார்களோ அவர்களுக்கு தொழிலில் இருந்த அனைத்து விதமான தடைகளும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது.
வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய இந்த விஜய தசமி நாளில் இந்த வன்னிகாசுரவதத்தை பார்க்க இயலாதவர்கள் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய வளர்பிறை தசமி திதியில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். முதலில் பழனியில் இருக்கக்கூடிய பழைய முருகனை தரிசனம் செய்ய வேண்டும். அடுத்ததாக பெரியநாயகி அம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய அம்மனை தரிசனம் செய்ய வேண்டும். கடைசியாக கோதை மங்கலத்தில் இருக்கக்கூடிய கோதை ஈஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் தொழிலில் இருந்து வந்த அனைத்து விதமான தடைகளும் பிரச்சனைகளும் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள் இழந்த அனைத்தையும் திரும்பப் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: தீராத நோய்களை தீர்க்கும் கார்த்திகை செவ்வாய்க்கிழமை வழிபாடு
தொழில் ரீதியாக இருக்கக்கூடிய அனைத்து விதமான சங்கடங்களும் தீர வேண்டும் என்றால் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் இந்த குறிப்பிட்ட நாளில் முருகப்பெருமானோடு இந்த தெய்வங்களையும் வழிபாடு செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.