
அன்றைய காலத்தில் அனைவரின் இல்லங்களிலும் சில பொருட்கள் முக்கியமாக இருக்கும். அந்த பொருட்களை மருந்து பொருட்களாக பயன்படுத்துவார்கள். அதிலும் குறிப்பாக சிறுபிள்ளைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பாக இருக்கும். அப்படி இருக்கக்கூடிய பொருட்களில் ஒன்றுதான் பெயர் சொல்லாதது. இதன் பெயரை சொல்லக்கூடாது என்றும் கூறுவார்கள். அப்படி சொன்னால் இதை வைத்து செய்யக்கூடிய மருந்து பலித்தமாகாது என்று ஒரு கூற்று நிலவி வருகிறது. இந்த பெயர் சொல்லாதது சொல்லாததை வைத்து எந்த முறையில் பரிகாரம் செய்தால் நம்முடைய வாழ்க்கை வளமான வாழ்க்கையாக மாறும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
ஒருவருடைய வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் முதலில் அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அடுத்ததாக அவருடைய குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக குடும்பத்தை பராமரிக்கும் அளவிற்கு பணவரவு ஏற்பட வேண்டும். இந்த பணவரவை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை செய்யும்பொழுது அந்த முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும். இந்த நான்கும் ஒருவருக்கு நடந்து விட்டால் அவரே மகிழ்ச்சியானவராக திகழ்வார். அப்படி ஒருவருடைய வாழ்க்கையை வளமான வாழ்க்கையாக மாற்றுவதற்கு வசம்பு எப்படி பயன்படும் என்று தெரிந்து கொள்வோம்.
இந்த பொருள் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதை பேரம் பேசாமல் அவர்கள் எவ்வளவு சொல்கிறார்களோ அப்படியே பணத்தை கொடுத்து வாங்கி வர வேண்டும். வாங்கி வந்த இந்தப் பொருளை நம்முடைய சமையலறையில் இருக்கக்கூடிய உப்பு பாத்திரத்திற்குள் வைத்து விட வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் வீட்டில் நோய் வாய்ப்பட்டவர்கள் இருந்தார்கள் என்றால் அவர்களின் நோயின் தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். மேலும் இதை மகாலட்சுமி அம்சம் பொருந்திய உப்புடன் வைப்பதன் மூலம் நமக்கு பணவரவு என்பது அதிகரிக்கும்.
அடுத்ததாக செல்வ செழிப்பு உயர்வதற்காக பணவரவு அதிகரிப்பதற்காக நாம் பணத்தை வைக்கும் பர்சில் ஒரு சிறிய துண்டாவது வசம்பை வைப்பதன் மூலம் பணவரவு என்பது அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சினைகள் வருகிறது குடும்பத்தில் எந்தவித சந்தோஷமும் இல்லை என்று வருத்தப்படுபவர்கள் அவர்களுடைய தாலி கயிற்றில் ஒரு சிறிய துண்டு வசம்பை வைத்து கட்டி அணிந்து கொள்வதன் மூலம் கணவன் மனைவிக்கிடையே இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் நீங்கும்.
இந்த வசம்பு பெண்களின் நெஞ்சுக்குழியில் படுவதன் மூலம் கருத்தரிப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. கடைசியாக நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து அந்த நெய்யில் இந்த வசம்பை நனைத்து அந்த தீபத்தில் நன்றாக காட்ட வேண்டும். சிறிது நேரத்தில் அது எரிய ஆரம்பிக்கும்.
பிறகு அதில் மை போன்ற அமைப்பு ஒன்று உருவாகும். இந்த மையை எடுத்து நம்முடைய நெற்றி அல்லது உச்சந்தலையில் வைத்துக்கொண்டு செல்லும்பொழுது செல்லும் காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே கடன் பிரச்சனை தீர கால பைரவர் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த வசம்பு பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து அவர்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.