- Advertisement -

வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட

- Advertisement -

நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு நல்ல மாற்றம் ஏற்படாதா என்றுதான் காத்துக் கொண்டு இருக்கிறோம். ஏதாவது ஒரு ரூபத்தில் முன்னேற்றம் உண்டாகாதா? பொருளாதாரத்தில் சிறந்து விளங்க முடியாதா? வேலையில் நல்ல மாற்றம் ஏற்படாதா தொழிலில் நல்ல லாபம் உண்டாகாதா என்று பலவிதமான கேள்விகளுடன் தான் ஒவ்வொரு நாளையும் கடந்து செல்கிறோம். அப்படிப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் தரும் வண்ணம் எந்த நேரத்தில் நாம் வாராகி அம்மனை தரிசனம் செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தீவிரமான கஷ்டங்களை தீர்வதற்கு உக்கிர தெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட உக்கிர தெய்வங்களில் மிகவும் முக்கியமான ஒரு தெய்வமாக திகழ்பவள்தான் வாராகி அம்மன். வாராஹி அம்மன் என்றதுமே பலருக்கும் பஞ்சமி திதி தான் ஞாபகத்திற்கு வரும். அந்த பஞ்சமி திதியோடு மற்றும் ஒரு திதியும் வாராஹி அம்மனை வழிபாடு செய்வதற்கு சிறந்த திதியாக விளங்குகிறது. அதுதான் அஷ்டமி திதி. அஷ்டமி திதி அன்று காலங்களுக்கு அதிபதியான காலபைரவரை வழிபாடு செய்வதை போலவே வாராகி அம்மனையும் வழிபாடு செய்யும்பொழுது நல்ல மாற்றம் உண்டாகும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக மூன்று முறை செய்தாலே போதும். நம்முடைய வாழ்க்கையில் பல விதமான நல்ல மாற்றங்கள் உண்டாகும். இந்த வழிபாட்டில் முக்கியமான ஒன்று என்னவென்றால் வாராகி அம்மனை தரிசனம் செய்வதுதான். வாராகி அம்மனை தரிசனம் செய்வதற்குரிய நாளாக அஷ்டமி திதி திகழ்கிறது. எந்த அஷ்டமி திதியாக இருந்தாலும் பரவாயில்லை. அஷ்டமி திதி அன்று பிரம்ம முகூர்த்த நேரமான காலை 3 மணியிலிருந்து 3:30 மணிக்குள் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய வாராகி அம்மனின் படம் அல்லது சிலைக்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

அந்த தீப வெளிச்சத்தில் வாராகி அம்மனை நாம் தரிசனம் செய்ய வேண்டும். அப்படி தரிசனம் செய்யும் பொழுது பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை 27 முறை கூற வேண்டும். வேறு எதுவும் செய்ய வேண்டியது கிடையாது. இப்படி தொடர்ச்சியாக மூன்று அஷ்டமி திதிகளில் நாம் வாராகி அம்மனை தரிசனம் செய்து வாராகி அம்மனின் இந்த ஒரு மந்திரத்தை கூறினால் போதும். வாராகி அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைத்து அதன் மூலம் நல்லதொரு வாழ்க்கையை வாழ முடியும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் மஹாவாராகி நமோஸ்துதே”

இதையும் படிக்கலாமே: பஞ்சமுக விநாயகர் வழிபாடு

அதிசக்தி வாய்ந்த இந்த நேரத்தில் வாராகி அம்மனை தரிசனம் செய்பவர்களுடைய வாழ்க்கையில் வாராகி அம்மன் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்துவார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -