- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

வீட்டில் கலசம் எதற்காக வைக்க வேண்டும். கலசத்தில் போட வேண்டிய பொருட்கள் என்னென்ன. கலசம் வைப்பதால் என்ன பலன்கள் கிடைக்கிறது

- Advertisement -

வீட்டில் செய்யப்படும் பூஜைகளில் பொழுதும், திருமண நிகழ்ச்சிகளின் பொழுதும், யாகங்கள் செய்யும் பொழுதும், கோவில் கும்பாபிஷேகம் செய்யும் பொழுதும் நிச்சயம் கலசம் வைத்து பூஜை செய்து அதன் பிறகுதான் மற்ற வேலைகளை துவங்குவார்கள். அவ்வாறு இந்த கலசம் ஏன் வைக்கப்படுகிறது? இதில் சேர்க்கப்படும் பொருட்கள் என்னென்ன? இந்த கலசத்தினை எவ்வாறு முறையாக வைக்க வேண்டும்? இந்த கலசம் வைப்பதனால் நமக்கு உண்டாகும் பலன்கள் என்னென்ன? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

எந்த வேலையை தூங்குவதாக இருந்தாலும் முதலில் விநாயகரைத் தொழுது விட்டு அதன் பிறகு தான் தொடங்க வேண்டும். அவ்வாறு மஞ்சளை வைத்து பிள்ளையார் பிடித்து கொண்டு, அதற்கு குங்குமப்பொட்டு வைத்து, மலர் சூட்டி நாம் செய்யப்போகும் செயல் நன்மையில் முடிய வேண்டும் என்று விநாயகரை வேண்டி பூஜை செய்த பின்னர் கலசம் வைக்க துவங்க வேண்டும்.

- Advertisement -

முதலில் செம்பு அல்லது பித்தளையினாளான கலச சோம்பை எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து கொள்ள வேண்டும். பின்னர் சொம்பில் முக்கால் பங்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகுஇதனனுடன் சிறிதளவு பன்னீர் சேர்க்க வேண்டும்.

அதன் பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் குங்குமம், சிறிய துண்டு பச்சை கற்பூரம், ஒரு ஏலக்காய், சிறிதளவு ஜவ்வாது, ஒரு ரூபாய் நாணயம் மற்றும் ஒரு எலுமிச்சை பழம் போன்றவற்றை ஒன்றாக கலச சொம்பினுள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு தேங்காயை எடுத்து அதற்கு கீழிருந்து மேல் முகமாக மஞ்சள் பூசி குங்குமப்பொட்டு வைக்க வேண்டும். பின்னர் 5 மாவிலைகளை எடுத்து சொம்பின் மீது சுற்றி வைத்து, அதன் நடுவே இந்த தேங்காயை வைத்து விட வேண்டும். அதன்பின் வாசனை நிறைந்த மலர்கள் சூடி இதனை அலங்காரம் செய்ய வேண்டும். மற்றும் வீட்டில் இருக்கும் நகைகள் கொண்டும் அலங்கரிக்கலாம்.

இவ்வாறு அலங்காரம் செய்த பின் கலசத்தை எங்கு வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் ஒரு வாழைஇலையயை வைத்து, அதன் மீது இரண்டு கைப்பிடி பச்சை அரிசியை பரப்பி வைக்க வேண்டும். பிறகு அரிசியின் மீது இந்த கலச சொம்பினை வைத்து விட வேண்டும். பிறகு விளக்ககை ஏற்றி தீபதூபம் காண்பித்து நமக்கு தெரிந்த மந்திரத்தை உச்சரித்து அம்மனை வேண்டி பூஜை செய்ய வேண்டும்.

இந்த கலச சொம்பு எப்படி நிறைந்துகாணப்படுகிறததோ அவ்வாறு நமது வீட்டில் செல்வவளங்களளும் நிறைந்து காணப்படும். இந்த கலசம் எவ்வாறு முழுமை பெற்று இருக்கிறதோ அவ்வாறு நமதுவாழ்க்கையயும் முழுமை பெற்று இருக்கும்.

பின்னர் எத்தனை நாட்கள் பூஜை செய்ய வேண்டுமோ அத்தனை நாட்களுக்கு பிறகு இறுதியாக கலசத்தினை கலைக்கும் பொழுது அந்த கலசத்தில் இருக்கும் தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும். அவ்வாறு செய்வதால் நமது பூஜைக்கான பலன்கள் அனைத்தும் இந்த தண்ணீரின் வழியே நமது வீடு முழுவதும் நிறைந்திருக்கும்.

- Advertisement -