- Advertisement -
வீட்டு குறிப்புகள்

இனி காய்கறிகளை பிரிட்ஜில் இப்படி ஸ்டோர் செய்து வையுங்கள். 10 நாட்கள் ஆனாலும் காய்கறிகள், கீரைகள், சுருங்கி போகாமல் கருத்துப் போகாமல் அழுகிப் போகாமல் இருக்கும்.

- Advertisement -

பெரும்பாலும் நாம் எல்லோருமே காய்கறிகளை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைப்பதை வழக்கமாக வைத்திருப்போம். அது தவறு கிடையாது. கூடுமானவரை கீரை வகைகளை மட்டும் வாங்கிய உடனே ஒரு நாள் மட்டும் ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு, உடனடியாக சமைத்து விடுங்கள். மற்றபடி மற்ற பொருட்களை எல்லாம் ஃப்ரிட்ஜில் எப்படி வைத்தால் நீண்ட நாட்கள் புதியது போலவே இருக்கும் என்பதை பற்றிய ஒரு சில பயனுள்ள குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுக்கு தேவைப்படும்போது இந்த குறிப்புகளை பின்பற்றி பலன் பெறலாம்.

முதலில் சாதாரணமாக இருக்கும் கேரி பேக்குகளை காய்கறிகள் போட நாம் பயன்படுத்துவோம் அல்லவா. அப்படிப்பட்ட கேரிபேக்குகளை எல்லாம் தவிர்த்து விட்டு, கொஞ்சம் திக்காக இருக்கக்கூடிய, பருப்பு வகைகள் பேக் செய்யக்கூடிய திக்கான மைக்கா கவர்களை காய்கறிகள் ஸ்டோர் செய்ய பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

உதாரணத்திற்கு உதயம் உளுத்தம் பருப்பு, உதயம் துவரம் பருப்பு, இப்படி பிராண்ட் வகைகளில் பருப்புகளை வாங்கும் போது அதை பேக் செய்து தரக்கூடிய கவர் கொஞ்சம் திக்காக இருக்கும். உள்ளே அலுமினியம் கலரில், கவர் இருக்கும் அல்லவா. அந்த கவருக்குள் கொத்தமல்லி தழை புதினா தழை அல்லது கீரை இவைகளை போட்டு சுருட்டி ஸ்டோர் செய்து வைத்தால் உள்ளே இருக்கும் கீரை பிரஷ்ஷாக நீண்ட நாட்களுக்கு இருக்கும் சீக்கிரத்தில் அந்த கீரை கருத்து போகாது. (குறிப்பா புதினா கொத்தமல்லி தழைகளை இந்த கவரில் போட்டு வைக்கலாம்.)

அதேபோல சில பொருட்கள் எல்லாம் ஜிப் லாக் கவரில் வரும். அந்த கவரையும் தூக்கி போடாதீங்க. அதற்குள்ளே பழ வகைகள், காய்கறிகளை வைத்து காற்று இல்லாமல் ஜிப்லாக் போட்டு வைத்தால் பழங்கள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாது. காய்கறி கீரை வகைகளை கூட அதில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அதன் பிறகு முள்ளங்கி, கத்திரிக்காய், வெண்டைக்காய், பீட்ரூட், கேரட், இப்படிப்பட்ட பொருட்களை எல்லாம் பிரிட்ஜில் ஸ்டோர் செய்யும் போது அதனுடைய காம்பு பகுதியையும் வால் பகுதியையும் வெட்டி விட வேண்டும். ஈரம் இல்லாமல் ஒரு துணியில் காய்கறிகளை துடைத்துவிட்டு ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, அதன் மேலே ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து, மூடி ஸ்டோர் செய்து வைத்தால் நீண்ட நாட்கள் பிரஷ் ஆக இருக்கும்.

ஸ்வீட் வாங்கக்கூடிய பிளாஸ்டிக் டப்பாக்கள், அல்லது உங்கள் வீட்டில் நிறைய சில்வர் டப்பாக்கள் இருந்தால் கூட அதன் உள்ளே காய்கறிகள் போட்டு மூடி பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாது.  டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் ஒரு காட்டன் வேட்டியை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி, அதை டப்பாவுக்கு உள்ளே காய்கறிக்கு மேலே கட்டாயமாக வைக்க வேண்டும். இல்லை என்றால் தண்ணீர் விட்டு காய்கறிகள் அழுகிவிடும். (காய்கறிக்கு மேலே ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் துணி வைக்காமல் தப்பாவை மூடி போடக்கூடாது.)

அதேபோல உருளைக்கிழங்கு கருணைக்கிழங்கு சேனைக்கிழங்கு இதில் எல்லாம் மண் போக கழுவுவது ரொம்ப ரொம்ப சிரமமாக இருக்கும். இப்படிப்பட்ட கிழங்கு வகைகளை சமைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே தண்ணீரில் போட்டு விடுங்கள். இந்த காய்கறிகளை சுத்தம் செய்வதற்காகவே ஒரு ஸ்பான்ஜ் நார், பாத்திரம் தேய்க்கக்கூடிய ஸ்பாஞ்ச் நார் அல்லது தேங்காய் நார் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி கிழங்கு வகைகளை தேய்த்து கழுவினால் மண் சுத்தமாக நீங்கிவிடும்.

- Advertisement -