
சாதாரணமாகவே வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி வழிபாடு செய்வது நமக்கு 100 மடங்கு பலன் தரும் என்றால், அமாவாசையோடு சேர்ந்து வரக்கூடிய வெள்ளிக்கிழமை நாளில் மகாலட்சுமி வழிபாடு செய்வது 1000 மடங்கு பலன் தரும் என்று சொல்லலாம். அதிலும் அமாவாசை வெள்ளிக்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீங்கள் செய்யும் இந்த வழிபாடு உங்கள் பண கஷ்டத்தை உடனடியாக தீர்த்து வைக்கும். அந்த வழிபாட்டை எப்படி மேற்கொள்வது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
5-7-2024 வெள்ளிக்கிழமை நிறைந்த அமாவாசை திதி. நாளை அதிகாலை வேளையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விட வேண்டும். சரியாக அதிகாலை 5:00 மணிக்கு பூஜை அறையில் விளக்கு ஏற்றி மகாலட்சுமியை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். குல தெய்வத்தையும் வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய இரண்டு கைகள் நிரம்ப உப்பை எடுத்துக் கொள்ளவும்.
கல்லுப்பு லேசாக உள்ளங்கைகளில் குத்தலாம் தவறு கிடையாது. அந்த அளவுக்கு உப்பை இருக்க பிடியுங்கள். இரண்டு உள்ளங் கைகளையும் அப்படியே இரண்டு தொடைகள் மீது வைத்து, முதுகு தண்டுவடம் நேராக இருக்கும் படி அமர்ந்து கொள்ளுங்கள். தரையிலும் விரிப்பு விரித்து அமரலாம். நாற்காலிகளும் அமரலாம். அது உங்கள் சௌகரியம்.
பூஜை அறையை பார்த்தவாறு மகாலட்சுமியை பார்த்தவாறு ‘ஓம் ஸ்ரீம் நம’ என்ற மந்திரத்தை சொல்லவும். மந்திரத்தை உச்சரிக்கும் போது கணக்கு வைக்க வேண்டாம். உங்களுடைய மனது வேண்டுதலில் மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டும். பத்து நிமிடங்கள் இந்த மந்திரத்தை ஆழ்மனதில் சொல்லி ஜெபம் செய்வோம். வாய்விட்டு சொன்னாலும் தவறு கிடையாது.
ஆனால் உள்ளம் உருக, மனம் உருக மகாலட்சுமியை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லவும். உள்ளங்கைகளில் இருக்கும் கல் உப்பு அப்படியே இருக்கட்டும். 10 நிமிடம், 15 நிமிடம், வெறும் 5 நிமிடமும் இந்த மந்திரத்தை சொன்னாலும் பிரச்சனை இல்லை. அது உங்கள் சௌகரியத்தை பொறுத்தது. ஆனால், நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை சொல்லி உங்கள் மனகஷ்டம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, இரண்டு கையில் இருக்கும் உப்பை ஒரு சின்ன கிண்ணத்தில் கொட்டி மகாலட்சுமியின் திருவுருவப்படத்திற்கு முன்பு வைத்து விடுங்கள்.
பூஜை அறையில் விளக்கு ஏற்றி இந்த வழிபாட்டை செய்யுங்கள். பூஜையை நிறைவு செய்து கொண்டு ஒரு கற்பூர ஆராதியை மகாலட்சுமிக்கு காட்டி விடுங்கள். பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த வழிபாட்டை முடித்துவிட்டு பிறகு உங்களுடைய அமாவாசை வேலைகளை நீங்கள் தொடங்கிக் கொள்ளுங்கள். அமாவாசை மாலை 6 மணிக்கு, அந்தக் கல் உப்பை எடுத்து அப்படியே குடிக்கின்ற நல்ல தண்ணீரில் கரைத்து மண் பாங்கான இடத்தில் ஊற்றி விடவும்.
கல்லுப்பை வைத்துக்கொண்டு நீங்கள் மகாலட்சுமியிடம் வைத்த வேண்டுதல் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். கடன் சுமை இருந்தால் அது கரையும். வருமானம் தேவை என்று நினைத்தவர்களுக்கு வருமானம் பெருகும். செல்வ செழிப்பில் நீங்கள் உயர்ந்தவர்களாக மாறுவீர்கள்.
இதையும் படிக்கலாமே: இனிமையான வாழ்க்கையை தரும் தீப வழிபாடு
கல் உப்புக்கு அத்தனை சக்தி இருக்கிறது. அதைவிட அமாவாசையோடு வெள்ளிக்கிழமை சேரும்போது, நீங்கள் வைக்கும் பிரார்த்தனைக்கு அதீத சக்தி. இன்னும் இதை நாம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வதால் இதற்கு உண்டான பலன் அபரிவிதமாக உங்களுக்கு கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.