- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇனிமையான வாழ்க்கையை தரும் தீப வழிபாடு

இனிமையான வாழ்க்கையை தரும் தீப வழிபாடு

- Advertisement -

வீட்டிலும், ஆலயத்திலும் தெய்வங்களை வழிபாடு செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் தீபம் என்ற ஒன்றை நாம் ஏற்றுவோம். இந்த தீபத்தில் பல சூட்சமங்கள் நிறைந்திருக்கின்றது. சிவபெருமான் ஜோதி வடிவத்தில் தோன்றினார் என்று கூறப்படுகிறது. மேலும் சபரிமலையில் வருடத்திற்கு ஒருமுறை ஜோதி ஏற்றி வழிபடும் வழக்கம் இருக்கிறது. கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி அன்று கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடும் வழக்கமும் இருக்கிறது. இதோடு மட்டுமல்லாமல் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தீபாவளி சமயத்திலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள்.

அன்றாடம் பூஜை செய்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது வாரத்திற்கு ஒருமுறை மட்டும் பூஜை செய்பவர்களாக இருந்தாலும் சரி தீபம் ஏற்றாமல் அவர்களால் அந்த வழிபாட்டை ஆரம்பிக்க இயலாது. அதே போல் பூர்த்தி செய்யவும் முடியாது. அப்படிப்பட்ட தீபத்தை எந்த முறையில் நாம் ஏற்றினால் நம்முடைய பணத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியடைந்து சுகமான வாழ்க்கையை வாழ முடியும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்

- Advertisement -

தீப வழிபாடு

தீபத்திற்கு என்று தனி மகத்துவம் இருக்கிறது. ஒரு தீபத்தில் நாம் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் ஆவாகனம் செய்துவிடலாம். தீபத்தில் ஊற்றக்கூடிய எண்ணையாக இருந்தாலும் சரி, போடக்கூடிய திரியாக இருந்தாலும் சரி, ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான பலன் இருக்கும். தீபத்தை நாம் எதில் ஏற்றுகிறோம் என்பதற்கும் பலன் இருக்கிறது. எத்தனை எண்ணிக்கையில் ஏற்றுகிறோம் என்பதற்கும் பலன் இருக்கிறது. எந்த நேரத்தில் ஏற்றுகிறோம் என்பதற்கும் பலன் இருக்கிறது.

ஆகமொத்தம் ஒருவருடைய வீட்டில் தீபம் இருக்கிறது என்றால் அந்த வீட்டில் கண்டிப்பாக முறையில் அந்த தீபத்தால் ஒரு நல்ல பலன் ஏற்படும் என்று தான் கூற வேண்டும்.அப்படிப்பட்ட தீபத்தை நாம் ஏற்றும்பொழுது கூடுதலாக நம்முடைய தேவைகள் பூர்த்தி அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

நவகிரகங்களின் அடிப்படையில் ஒவ்வொரு காரியமும் நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஒருவருக்கு அன்றாடம் தன்னுடைய தேவைகள் பூர்த்தியடைய வேண்டும் என்றால் சுக்கிர பகவானின் அருள் வேண்டும். சுகமான ஆடம்பரமான வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைத்தாலும் சுக்கிர பகவானின் அருள் வேண்டும். சிறிய தொகையாக இருந்தாலும் அன்றாடம் ஏதாவது ஒரு பணவரவு வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் சுக்கிர பகவானின் அருள் வேண்டும்.

அப்படி சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான தீப பரிகாரம். பொதுவாக நாம் தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ வீட்டில் தீபம் ஏற்றி வழிபடும் பழக்கம் என்பது இருக்கிறது. நீங்கள் எந்த விளக்கில் தீபம் ஏற்றினாலும் பரவாயில்லை, எந்த எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினாலும் பரவாயில்லை, எந்த திரியை போட்டு தீபம் ஏற்றினாலும் பரவாயில்லை, அந்த தீபத்தில் ஐந்து டைமண்ட் கற்கண்டு மட்டும் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

வேறு எதுவுமே செய்ய தேவை இல்லை. டைமண்ட் கற்கண்டு என்பது சுக்கிர பகவானுக்குரிய பொருளாக திகழ்கிறது. மேலும் டைமண்ட் கற்கண்டு என்பது இனிப்பு சுவை உடையது என்பதால் அந்த தீபம் எரியும் பொழுது அதிலிருந்து அந்த இனிப்பு சுவையானது பரவ ஆரம்பிக்கும். இப்படி பரவுவதால் இனிமையான வாழ்க்கையை வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே:கடன் அடைய பானை பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை மகா பெரியவர் கூறி இருக்கிறார். அப்படிப்பட்ட மகான் கூறிய இந்த எளிமையான பரிகாரத்தை நாமும் நம் இல்லத்தில் செய்து பண தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து நலமுடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்