
நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பொருளில் அதிக அளவில் நாட்டம் இருக்கும், ஏதாவது ஒரு செயலை செய்வதற்கு அதிகளவில் ஆசைப்படுவோம், ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு அதிக அளவில் விரும்புவோம், இது எனக்கு மிகவும் பிடிக்கும் இது எனக்கு பிடிக்காது என்று நாம் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் செயல்படுவோம்.
அதேபோல்தான் ஒவ்வொரு தெய்வத்திற்கும் பிடித்தமான செயல்கள், பிடித்தமான மலர்கள், பிடித்தமான நிறம், பிடித்தமான பிரசாதம் என்று பல இருக்கின்றது. அவற்றை நாம் அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் அந்த தெய்வத்திற்கு பிடித்தமான பொருட்களை வைத்து வழிபாடு செய்தோம் என்றால் விரைவிலேயே நாம் வேண்டிய வரத்தை அந்த தெய்வம் நமக்கு தரும். அந்த வகையில் வாராகி அம்மனுக்கு பிடித்தமான மலரை பற்றி தான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
உக்கிர தெய்வங்கள் வரிசையில் அதிக அளவில் பலராலும் வழிபாடு செய்யக்கூடிய ஒரு தெய்வமாக திகழக்கூடியவன்தான் வாராகி அம்மன். அவளிடம் நாம் முழுமனதோடு எந்த ஒரு வேண்டுதலை வைத்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்றும், நம்மிடமும் நம் வீட்டிலும் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகும் என்றும், எதிரிகளின் தொல்லை நீங்கும் என்றும் கூறப்படுகிறது. நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தையும் விளக்கக்கூடிய அற்புதமான தெய்வமாகவும் வாராகி அம்மன் திகழ்கிறார். அப்படிப்பட்ட வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது எந்த ஒரு பொருளை வைத்து வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்று தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அபராஜித மலர் என்ற ஒரு மலர் இருக்கிறது. இந்த மலர்தான் வாராஹி அம்மனுக்கு மிகவும் பிடித்தமான மலர் என்று கூறப்படுகிறது. இந்த மலரை வாராகி அம்மனின் பாதத்தில் வைத்து வாராகி அம்மனுக்குரிய ஒரு மந்திரத்தை நாம் கூறி நம்முடைய வேண்டுதலை வைக்கும் பொழுது வாராகி அம்மன் எந்தவித தயக்கமும் இன்றி நாம் வேண்டிய வரத்தை நமக்கு அருள்வார் என்று கூறப்படுகிறது. இந்த மலரை நாம் அனைவருமே பார்த்திருப்போம்.
இந்த மலர் சிவபெருமானுக்கு உரிய மலராகவும், அதேசமயம் சனிபகவானுக்கு உரிய மலராகவும் கருதப்படுகிறது. இந்த மலரை பொதுவாக அனைவரும் சங்கு பூ என்று கூறுவோம். இதில் எந்த நிறம் கிடைத்தாலும் பரவாயில்லை. எந்த நிறத்தில் இருக்கக்கூடிய சங்கு மலராக இருந்தாலும் அந்த மலரை பறித்து வாராகி அம்மனின் பாதத்தில் வைத்து விட வேண்டும். வாராகி அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வாராஹி அம்மனின் இந்த மந்திரத்தை முழுமனதோடு கூறுபவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்கள் வேண்டிய வரம் கிடைக்கும்.
இந்த வழிபாட்டு எப்பொழுது செய்ய வேண்டும்? எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். எப்பொழுதெல்லாம் உங்களுக்கு சங்குப்பூ கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் இந்த வழிபாட்டை செய்யலாம். குறிப்பாக பஞ்சமி திதியில் இந்த மலர் கிடைத்தால் தவறவிடாமல் வாராகி அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் அன்றைய நாளில் நாம் இந்த மலரை வைத்து இந்த மந்திரத்தை கூறும்பொழுது அதற்குரிய பலன் இன்னும் அதிகமாகவே கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:சொல்வாக்கும் செல்வாக்கும் உயர பரிகாரம்
இந்த எளிமையான மந்திரத்தையும், வாராகி அம்மனுக்கு பிடித்தமான இந்த மலரையும் வைத்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரம் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.