ஒரு மனிதனுக்கு அறிவு திறமை அதிர்ஷ்டம் இவைகளோடு சேர்ந்து வசிய தன்மையும் இருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேற வேண்டும். அறிவிருந்து திறமையிருந்து அதிர்ஷ்டம் இருந்து அழகும் வசிய தன்மையும் இல்லை என்றால் அந்த அறிவுத்திறன் எளிதாக வெளிப்படாது. அதற்காக அழகுக்கு மட்டுமே முதலிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை.
அழகும் வசியமும் இருக்கும் பட்சத்தில் நம்முடைய முன்னேற்றம் இரட்டிப்பு மடங்காக இருக்கும். ஒரு இடத்திற்கு செல்லும்போது சொல்வாக்கும் செல்வாக்கும் உயர வேண்டும் என்றால், வசியத்தன்மை இருக்க வேண்டும் அந்த வசியத்தன்மையை சுலபமாக பெறுவதற்கு உண்டான ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ஒரு பொருளை எடுத்துக்கொண்டு நீங்கள் முக்கியமான வேலைக்கு சென்றால், அந்த வேலை உங்களுக்கு சாதகமாக அமையும்.
நீங்கள் என்ன சொல்கிறீர்களோ எதிராளி அதற்கு தலையாட்டிக்கொள்வார். உதாரணத்திற்கு வியாபாரத்தில் ஒப்பந்தம் போட போறீங்க. நீங்கள் சொல்லும்படி எல்லாம் உங்களுடைய பார்ட்னர் கேட்க வேண்டும். பெரிய காண்ட்ராக்ட் கிடைக்க வேண்டும். அல்லது நீங்கள் பெரிய பதவியில் இருக்கிறீர்கள் உங்களுக்கு கீழே இருப்பவர்கள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் வழக்கறிஞர்களுக்கு பேச்சில் திறமை வெளிப்பட வேண்டும், என்றால் இந்த ஒரு பொருளை கையில் எடுத்துக் கொண்டு செல்லவும்.
நீங்கள் சொல்லுவதை எதிரில் இருப்பவர்கள் அப்படியே கேட்பார்கள். உங்கள் பேச்சு வசியத்தன்மை நிறைந்த பேச்சாக மாறும். எதிராலியை வசியம் செய்து நினைத்ததை சாதித்துக் கொள்ளலாம். அதற்காக தவறான விஷயங்களுக்கெல்லாம் இந்த பரிகாரத்தை பயன்படுத்தக் கூடாது. நல்லதுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டிய பரிகாரம் இது. இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த வேண்டிய பொருள் நாட்டு மருந்து கடைகளில் உங்களுக்கு சுலபமாக கிடைக்கும்.
சொல்வாக்கு செல்வாக்கு உயர
புல்லாமணக்கு என்று சொல்லுவார்கள். இது சின்ன விதையாக உங்களுக்கு கிடைக்கும். அதை பச்சையாக இருக்கும் போதே பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். புல்லாமணக்கு காய்ந்து விட்டால் பரிகாரத்திற்கு பயன்படாது. இதை எப்படி பயன்படுத்துவது. நாட்டு மருந்து கடையிலிருந்து இந்த பொருளை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளவும்.
காலையில் எழுந்து வீட்டில் இருந்து முக்கியமான வேலைக்காக வெளியே செல்வதற்கு முன்பு, இந்த புல்லாமணக்கு கையில் வைத்துக்கொண்டு, குலதெய்வத்தை நினைத்து, செல்லும் காரியம் வெற்றிகரமாக அமைய வேண்டும். நான் நினைத்தபடி எல்லாம் நடக்க வேண்டும் என்று பிராத்தனை வைத்து, இந்த புல்லாமணக்கை உங்களுடைய பர்ஸிலோ, ஹேண்ட் பேக், பாக்கெட்டிலோ வைத்துக்கொண்டு செல்லுங்கள்.
இதையும் படிக்கலாமே: தீய சக்தியை விரட்டும் சிவ மந்திரம்
நீங்கள் சென்ற காரியம் நிச்சயம் உங்களுக்கு சாதகமாகத்தான் அமையும். உங்களுடைய செல்வாக்கும் சொல்வாக்கும் சென்ற இடத்தில் எல்லாம் உயரும். தினமும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம். முக்கியமான விஷயத்தில் முயற்சிகளை மேற்கொள்ளும் போது இந்த பொருளை கையோடு எடுத்துச் செல்லுங்கள் அந்த காலத்திலேயே நம்முடைய முன்னோர்கள் வசிய தன்மைக்காக பயன்படுத்திய பொருள்தான் மீண்டும் பதிவு செய்து கொள்கின்றோம். தவறான விஷயத்திற்கு இந்த பொருளை பயன்படுத்த வேண்டாம். நல்லதை நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.