- Advertisement -

மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கும். அந்த தேவைகள் நியாயமான தேவைகளாக இருக்கும் பட்சத்தில் அந்த தேவைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காக எந்த முறையில் நாம் மகாலட்சுமி தாயாரிடம் கோரிக்கை வைத்து எப்படி வழிபட்டால் நாம் வேண்டிய வரத்தை மகாலட்சுமி தாயார் தருவார் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பெண் தெய்வங்களுக்கென்று தனித்துவமான தன்மைகள் இருக்கின்றன. ஆண் தெய்வத்தை விட பெண் தெய்வங்கள் எளிதில் வரங்களை வாரி தருவார்கள். அதோடு மட்டுமல்லாமல் பெண்கள் பெண் தெய்வத்தை வழிபடுவதன் மூலம் அற்புதமான பலன்களை பெற முடியும் என்று தான் ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. அப்படி பெண்கள் வேண்டிய வரத்தை பெறுவதற்கு மகாலட்சுமி தாயாரை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை தொடர்ந்து 48 நாட்கள் மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்த்து விட்டு மீத நாட்களை கணக்கில் வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டிற்கு தேவைப்படும் பொருட்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று மகாலட்சுமி தாயாரின் படம் மற்றொன்று விரலி மஞ்சள். உடையாத நல்ல விரலி மஞ்சளாக பார்த்து 48 விரலி மஞ்சள்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வழிபாட்டை ஆரம்பிப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுவது வெள்ளிக்கிழமை. முடிந்த அளவிற்கு பிரம்ம முகூர்த்த வேளையில் இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் இதன் பலனை விரைவிலேயே அடைய முடியும். இயலாதவர்கள் காலை 6 மணியில் இருந்து ஏழு மணிக்குள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை சுக்கிரஹோரையான காலை ஆறு மணியில் இருந்து ஏழு மணிக்குள் இந்த வழிபாட்டை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு தாம்பாலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாளத்தில் வாங்கி வைத்திருக்கும் 48 விரலி மஞ்சள்களையும் வைத்து பரப்பிக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாரின் படத்தையோ அல்லது விக்கிரகத்தையோ சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்து மல்லிகை பூ மாலை சாற்ற வேண்டும். இயன்றவர்கள் தாமரை பூவையும் வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஒரு நெய் தீபத்தை ஏற்றுங்கள். பிறகு மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு மஞ்சள் நிற துணியை விரித்துக் கொள்ள வேண்டும்.

உங்களுடைய கோரிக்கை என்னவோ அந்த கோரிக்கையை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வேலை வேண்டும் என்றால் வேலை வேண்டும் மகாலட்சுமி தாயே போற்றி, திருமணம் நடக்க வேண்டும் என்றால் திருமணம் விரைவில் நடக்க வேண்டும் மகாலட்சுமி தாயே போற்றி, கடன் அடைய வேண்டுமென்றால் பண வரவு அதிகரிக்க வேண்டும் மகாலட்சுமி தாயே போற்றி என்று நம்முடைய வேண்டுதலுக்கு ஏற்றவாறு நேர்மறையான வார்த்தைகளை உபயோகித்து கடைசியில் மகாலட்சுமி தாயே போற்றி என்று கூற வேண்டும்.

- Advertisement -

ஒரு விரலி மஞ்சளையும் எடுத்து வேண்டுதலோடு சேர்ந்து மகாலட்சுமி தாயாரின் போற்றி கூறி மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் அந்த விரலி மஞ்சளை வைத்து அப்படியே மஞ்சள் துணியில் வைத்து விட வேண்டும். இப்படி 48 விரலி மஞ்சள்களுக்கும் இதே முறையில் வழிபாடு செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் நெய்வேத்தியமாக கற்கண்டு அல்லது ஏலக்காய் வைக்கலாம்.

இந்த பூஜையை நிறைவு செய்த பிறகு மாலை நேரத்தில் இந்த விரலி மஞ்சள் அனைத்தையும் எடுத்து மறுபடியும் தாம்பாளத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் இதே வழிமுறைகளை பின்பற்றி அதே கோரிக்கையை கூறி மகாலட்சுமி தாயாருக்கு விரலி மஞ்சள் அர்ச்சனை செய்ய வேண்டும். 48-வது நாள் நெய்வேத்தியத்திற்காக பால் பாயாசம் வைக்க வேண்டும். 48 நாட்கள் நிறைவடைந்த பிறகு 49 வது நாள் இந்த விரலி மஞ்சள் எடுத்து மஞ்சள் நூலால் மாலையாக கட்டி அருகில் இருக்கக்கூடிய மகாலட்சுமி ஆலயத்திற்கு சென்று மகாலட்சுமி தாயாருக்கு வழங்கி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமி நித்திய வாசம் செய்ய வழிமுறைகள்

முழு நம்பிக்கையுடன் மகாலட்சுமி தாயாரை இந்த முறையில் வழிபடும் பெண்கள் கேட்கும் வரத்தை எந்தவித தடைகளும் இன்றி மகாலட்சுமி தாயார் வழங்குவார்.

- Advertisement -