- Advertisement -
- Advertisement -

இன்றைய அளவில் பெரும்பாலான முருகப்பெருமானின் மீது அதிக நம்பிக்கையும் பக்தியும் கொண்டிருக்கிறார்கள் இந்த கலியுகத்தை இந்த கலியுகத்தை கந்தனுக்குரிய காலமாகவே கருதலாம். அந்த அளவிற்கு தந்த பெருமான் தன்னுடைய பக்தர்களுக்கு துயர்களை துடைத்து காத்து வருகிறார் அப்படியான முருகப்பெருமானை நாம் எந்த முறையில் வணங்கினால் அவருடைய அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

முருகனின் அருள் பெற வழிபாடு
முருகப்பெருமானின் வழிபாடு என்றாலே கிருத்திகை நட்சத்திரம் சஷ்டி திதி போன்ற தினங்கள்தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும் ஆனால் முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரமான விசாக நட்சத்திரத்திலும் அவரை வழிபாடு செய்வது மிகுந்த பலனை தருவதாக அமையும். அந்த வகையில் இன்று விசாக நட்சத்திரம் அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த நாளில் இந்த வழிபாடு துவங்குவது சிறந்தது இந்த வழிபாட்டை ஆலயத்தில் சென்று தான் செய்ய வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் முருகர் ஆலயமே இல்லை எனும் பட்சத்தில் மட்டும் வீட்டில் செய்யுங்கள். ஆலயம் உள்ளவர்கள் நிச்சயம் ஆலயத்தில் சென்று தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இன்று 6 புது மண் அகல்விளக்கு வாங்கி சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டிட்டுக் கொள்ளுங்கள்.

அத்துடன் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் உங்கள் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளுங்கள். விளக்கு ஏற்ற பஞ்சு திரி முருகருக்கு உகந்த அரளிப்பூ இவற்றுடன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானுக்கு முன்பாக ஆறு தீபத்தையும் ஏற்றி உங்கள் பிரச்சனை எதுவோ அல்லது உங்களின் தேவை எதுவும் அவையெல்லாம் நிறைவேற வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தொடங்கிய இந்த வழிபாட்டை 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். 48 நாட்களும் புது மண் அகல் விளக்கு தான் வாங்க வேண்டும். அப்படி வாங்க முடியாது என்பவர்கள் பச்சரிசி அரைத்து வைத்துக் கொண்டு மாவு விளக்கையும் போடலாம். இந்த வழிபாடு முருகனின் அருளை நமக்கு முழுவதுமாக பெற்று தரும் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி இன்றைய தினத்தில் கந்த சஷ்டி கவசத்தை ஒரு முறை பாராயணம் செய்ய வேண்டும். அதே போல் தொடர்ந்து 48 நாட்கள் முருகப்பெருமான் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து விட்டு கந்தபுராணத்தை தொடர்ந்து ஒருமுறை பாராயணம் செய்து வர வேண்டும். இந்த வழிபாடு செய்வதும் உங்களுடைய வேண்டுதல்கள் கனவு கஷ்டங்கள் அனைத்தையும் தீர்ப்பதற்கு ஒரு நல்ல வழியாக கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கடன் காணாமல் போக செய்ய வேண்டிய தானம்

இந்த இரண்டு வழிபாடுகளில் உங்களால் எந்த வழிபாடு செய்ய முடியுமோ அதை இன்றைய தினத்தில் துவங்குங்கள். இந்த வழிபாடு செய்ய செய்ய கந்தனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைத்து நீங்கள் நினைத்த மாத்திரத்தில் கந்தன் உங்களுக்கு நினைத்ததை நிச்சயம் தந்தருள்வார் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை துவங்கலாம்.

- Advertisement -