- Advertisement -
வீட்டு குறிப்புகள்

வாஷிங் மெஷினில் துணி துவைப்பவரா? வருட கணக்கில் அதில் துணி துவைப்பவர்கள் இந்த விஷயத்தை மட்டும் கவனிக்காமல் விட்டுடாதீங்க! 3 மாசத்துக்கு ஒரு முறை செக் பண்ணுங்க.

- Advertisement -

இன்று எல்லோருடைய வீட்டிலும் பரவலாக வாஷிங் மெஷின் இருக்கிறது என்று கூறலாம். அந்த அளவிற்கு உபயோகமான பொருளாக மாறிவிட்ட இந்த வாஷிங் மெஷினில் வருட கணக்கில் துணி துவைப்பவர்கள் கண்டிப்பாக இதை கவனிக்க மறந்து விடுகிறார்கள். எந்த ஒரு மிஷினையும் பயன்படுத்தும் முன்பு அதில் இருக்கக்கூடிய ஆபத்துகளையும் சேர்த்து தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். வாஷிங் மெஷின் பயன்படுத்துபவர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்ன? இதனால் உண்டாக கூடிய ஆபத்துக்கள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

வாஷிங் மெஷினில் துணி துவைப்பவர்கள் தன்னுடைய அன்றாட வேலையில் இருந்து பெரும் பகுதியை சேமிக்கின்றனர். நேரத்தையும், நம்முடைய உழைப்பையும் மிச்சப்படுத்தி கொடுக்கும் இந்த வாஷிங் மெஷின் வருட கணக்கில் மாடு மாறி நமக்கு உழைத்து சேவை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய வாஷிங் மெஷினுக்கு குறைந்த பட்சமாக மூன்று மாதம் ஒரு முறையாவது பராமரித்து சுத்தம் செய்வது அவசியமாகும்.

- Advertisement -

வருட கணக்கில் இதை கவனிக்க மறந்தவர்கள், இன்றே இப்படி செஞ்சி பாருங்க நீங்களே ஆச்சரியப்படுவீங்க. டாப் லோடட் வாஷிங் மெஷின் எடுத்துக் கொள்வோம். அதில் துணி துவைக்கும் ஸ்பின் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு வளையத்தின் அடியில் மறைந்திருக்கும் இந்த மர்மம் நமக்கு ஃபங்கள் இன்பெக்சன் போன்ற தொந்தரவுகளையும் ஏற்படுத்தும் அபாயத்துடன் இருக்கிறது.

வாஷிங் மெஷினில் நடுப்பகுதியில் இருக்கும் இந்த கனமான வளையத்தை எளிதாக கழட்டுவதற்கு நடுப்பகுதியில் ஒரு ஸ்க்ரூ போன்ற அமைப்பை கொடுத்து இருப்பார்கள். சில வாஷிங் மெஷினில் சுற்றிலும் சிறு சிறு பிளாஸ்டிக் கேப்புகள் பொருத்தப்பட்டிருக்கும். இதை லேசாக ஸ்க்ரூ டிரைவரின் முனைப்பகுதியை வைத்து எடுத்து விட்டாலே தனியாக வந்து விடும். நடுப்புறத்தில் இருக்கும் அந்த ஸ்க்ரூவை கழட்டினால் மொத்த வளையத்தையும் தூக்கி எடுத்து விடலாம்.

- Advertisement -

நீங்கள் வளையத்தை எடுத்து பார்த்தால் உள்ளே அதிகப்படியான அழுக்குகளும், பாசியும் படிந்திருக்கும். இந்த அழுக்குகள் வெளியில் போக முடியாமல் மீண்டும் மீண்டும் வாஷிங் மெஷின் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும். இதனால் நீங்கள் துணி துவைக்கும் பொழுது உங்களுடைய துணிகளிலும் இது பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். நாட்பட்ட வாஷிங்மெஷினில் இருக்கக்கூடிய அதிகப்படியான அழுக்குகள் பூஞ்சை தொற்றுகளையும் ஏற்படுத்தும் அபாயத்துடன் இருக்கும் எனவே இந்த மெஷினில் துவைப்பவர்கள் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டி இருக்கலாம்.

நீங்கள் உங்களுக்கு வேலையில்லாத சமயங்களில் இது போல வாஷிங் மெஷினுக்கு கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி இந்த பகுதியை மட்டும் சுத்தம் செய்து வைத்துக் கொண்டால் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமான துணிகளை அது துவைத்துக் கொடுக்கும். முடியாதவர்கள் குறைந்தது மூன்று மாதத்தில் இருந்து ஆறு மாதத்திற்கு உள்ளாவது இந்த இடத்தை கண்டிப்பாக சுத்தம் செய்து விடவும். நாள்பட்ட அழுக்குகள் சேர்ந்தால் ஒரு விதமான துர்நாற்றமும் அடிக்க துவங்கும்.

இதையும் படிக்கலாமே:
மழைக்காலத்தில் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லையா? லிக்விட் போட்டாலும் கொசு வருதா? வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை வைத்து இப்படி மட்டும் செஞ்சு பாருங்க, ஒரு கொசு கூட உங்க வீட்டு பக்கம் இனி எட்டி கூட பார்க்காது!

தண்ணீர் நிற்க நிற்க தண்ணீரில் இருக்கக்கூடிய மெல்லிய மண் துகள்கள் மற்றும் சோப்பு தூள் இரண்டும் கலந்து பாசி பிடிக்க ஆரம்பிக்கும். இந்த பாசி பிடித்த பகுதி தண்ணீரில் அடித்து செல்ல முடியாமல், அப்படியே தேங்கி நிற்கும். இதுதான் நாளடைவில் அழுக்குகளாக மாறுகிறது. இந்த அழுக்கை நீங்கள் அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். வாஷிங் மெஷின் பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக இதை தெரிந்து வைத்திருப்பது ரொம்பவே நல்லது.

- Advertisement -