மழைக்காலத்தில் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லையா? லிக்விட் போட்டாலும் கொசு வருதா? வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை வைத்து இப்படி மட்டும் செஞ்சு பாருங்க, ஒரு கொசு கூட உங்க வீட்டு பக்கம் இனி எட்டி கூட பார்க்காது!

onion-kosu-mosquito
- Advertisement -

மழைக்காலம் வந்து விட்டாலே கொசுத் தொல்லை தாங்க முடியாத அளவிற்கு இருக்கும். இப்பொழுது வரும் கொசுக்கள் எல்லாம் சற்று குண்டு குண்டாகவே இருக்கிறது. ஒரு முறை கடித்தாலே அதிக நேரம் நமைச்சல் எடுக்கிறது. அந்த அளவிற்கு வலிமையாக இருக்கக்கூடிய இந்த கொசுக்கள் லிக்வீடுக்கு கூட மயங்குவது கிடையாது. இனிமே செயற்கை ரசாயனங்கள் கலந்த லிக்விடை தூக்கி போட்டுவிட்டு, பத்து பைசா செலவில்லாமல் வீட்டிலேயே இப்படி செஞ்சு வச்சிடுங்க, ஒரு கொசு கூட உங்க வீட்டு பக்கம் தலை வைத்து படுக்காது. கொசு தொல்லை நீங்க அருமையான இயற்கை வழி என்ன? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் இனி அலச இருக்கிறோம்.

வீட்டை சுற்றிலும் முதலில் தண்ணீரை தேங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் அடிக்கும் மழைக்கு எங்கு இதெல்லாம் கவனிப்பது? எந்த காலத்திலும் வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். மழைக்காலத்தில் குறிப்பாக ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரின் மூலம் புதிய கொசுக்கள் உற்பத்தியாகும். இந்த கொசு முட்டைகள் அதி வேகமாக பரவி டெங்கு போன்ற அபாயமான நோய்களை கூட நமக்கு கொடுக்கும் என்பதால் கொசு தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு இயற்கையான முறையில் எதை கையாண்டால் 100% நமக்கு வேலை செய்யும்? என்பதை பார்த்து விடுவோம்.

- Advertisement -

முதலில் உங்களிடம் வேப்ப எண்ணெய் இருக்க வேண்டும் வேப்ப எண்ணெய்க்கு மிஞ்சிய ஒரு மருந்து நம் வீட்டில் இருக்க முடியாது. வேப்ப எண்ணெய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த வேப்ப எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு ஏதாவது ஒரு வாணலி அல்லது தாளிப்பு கரண்டியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

எண்ணெய் லேசாக சூடேறியதும் அதில் நான்கு சிறிய அளவிலான கற்பூர வில்லைகளை நுணுக்கி சேருங்கள். அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொண்டு தான் இதை செய்ய வேண்டும். பின்னர் நான்கு பூண்டு பல் எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு உடலில் இட்டு இடித்து இதனுடன் சேர்த்து பொரிய விடுங்கள். பூண்டு நன்கு பொன்னிறமாக சிவக்க வறுபட வேண்டும். பூண்டின் வாசமும், வேப்ப எண்ணெயின் புகையும் கலந்து வீடு முழுவதும் பரவ வேண்டும்.

- Advertisement -

பின்னர் இந்த எண்ணெயை நன்கு ஆற விட்டு விடுங்கள். சமையல் கட்டில் இருந்து ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை தோல் உரித்து கொள்ளுங்கள். வெங்காயம் முழுவதுமாக இந்த எண்ணெயை தடவி கொள்ள வேண்டும். பின்னர் ஏதாவது ஒரு சிறிய அளவிலான கயிறு எடுத்து வெங்காயத்தை சுற்றிலும் நன்கு கட்டிக் கொள்ளுங்கள். பின்னர் இதை கதவு, ஜன்னல் போன்ற ஏதாவது ஒரு இடத்தில் தொங்க விட்டு விடுங்கள்.

இந்த வெங்காயம் நான்கு ஐந்து நாட்களுக்கு அப்படியே பிரஷ்ஷாக இருக்கும் கெட்டுப் போகாது. இதில் தடவி இருக்கும் எண்ணெயின் வாசம் ஒரு கொசுவை கூட நம் வீட்டு பக்கம் வர விடாது. அதற்கு இந்த வாசம் சுத்தமாகவே பிடிக்காது மேலும் கொசுக்கள் இருந்தாலும் அது வெளியில் ஓடிவிடும். அந்த அளவிற்கு எஃபக்ட்டிவ்வாக இருக்கக் கூடிய இந்த வெங்காய டெக்னிக் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, கொசு தொல்லை இனி உங்கள் வீட்டில் இல்லை!

- Advertisement -