- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க ஒரு சிறந்த பரிகாரம்.

ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களுக்கும், இந்த தலைமுறையில் ஒருபவர் செய்த பாவங்களுக்கும் நிச்சயம் தண்டனை உண்டு என்பது மஹான்களின் கருத்து. அதன்படி ஒருவரின் ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி நமது பாவங்களுக்கான தண்டனையை தருகிறார். இந்த தண்டனையில் இருந்து விடுபட சித்தர் ஒருவர் கூறிய மிக எளிய பரிகாரம் ஒன்றை இங்கு பார்ப்போம் வாருங்கள்.

சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று முறை சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை அரும்புகள் தூக்கிச் செல்லும். அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம்.

- Advertisement -

ஒரு பிடி அரிசியால் எப்படி பாவம் நீங்கும் என்று கேட்கிறீர்களா. நாம் தூவிய பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அது அரும்பிற்கு மிக சிறந்த உணவாக மாறும் . இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு எறும்புகள் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இப்படி இரண்டரை வருடங்கள் வரை தன கூட்டிற்குள்ளே இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள் என்பது நம்பிக்கை.

இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும். அப்படி மாறியதும், நாம் எறும்பிற்கு இட்ட உணவின் பலன் வலு இழந்துபோய்விடும். இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் நமது பாவங்கள் நீங்குவதோடு சனிபகவானால் நமக்கு எந்த வித துன்பங்களும் நேராது.

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி, அர்த்தாஷ்டகச்சனி – சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும். அதேபோல் உடல், ஊனமுற்றவர்களுக்கு காலணிகள் மற்றும் அன்ன தானம் அளிப்பது மிகவும் நல்லது. இதனாலும் சனிபகவானின் உக்கிரம் குறையும்.

- Advertisement -
Published by