சனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020

sani bagavaan
- Advertisement -

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி அன்று சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியின் மூலன் எந்தெந்த ராசிக்காரர்கள் பலனடைகிறார்கள், எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யவேண்டும் என்பதை ராசி வாரியாக விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
Mesham Rasiமேஷ ராசி நண்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி நன்மையாகவே உள்ளது. இதுவரை இருந்த அஷ்டம சனி முடிவுற்று இப்போது பாக்ய சனி துவங்குகிறது. அதனால் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகிவிடும். இதுவரை இருந்து வந்த கடன் தொல்லை, தேவை இல்லாத மருத்துவ செலவு போன்ற அனைத்து பிரச்சனைகளும் தீரும். இனிமேல் உங்களுக்கு ஏறுமுகம் தான். உங்கள் ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருந்தால் புதிய முயற்சிகளை நீங்கள் துணிந்து செய்யலாம். இனி செய்யும் தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி என அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasiரிஷப ராசி நண்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி சற்று கஷ்டங்களை தரவல்லது என்றே கூற வேண்டும். உங்களுக்கு இந்த சனி பெயர்ச்சியில் இருந்து அஷ்டம சனி துவங்குகிறது. இதனால் செய்யும் தொழிலில் தடை, விரயச் செலவு, தாய் தந்தையருக்கு உடல் நல பாதிப்பு இப்படி பல இன்னல்களை சனிபகவான் உங்களுக்கு தரலாம். தற்சமயம் உங்கள் ராசிக்கு குருபலம் இருப்பதால், சனிபகவானின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும். ஆனாலும் நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பதே சிறந்தது.

ஐயோ அஷ்டம சனி காலம் வந்துவிட்டதே என அதற்காக நீங்கள் சோர்ந்து போக தேவை இல்லை. கடவுளின் அனுகிரகம் அனைவருக்கும் உண்டு. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேரயை வழிபடுவதன் மூலம் சனியின் தாக்கம் குறையும். அதோடு சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுங்கள். பாரத்தை இறைவனிடம் விட்டுவிடுங்கள் அவர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
சனி தோஷம் போக்கும் அற்புதமான மந்திரம்

மிதுனம்:
Mithunam Rasiஉங்கள் ராசிக்கு இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் சில நன்மைகளும் சில சங்கடங்களும் நேரிடும். நண்பர்கள் மூலம் உங்களுக்கு நன்மை வந்து சேரும். சிலருக்கு பதவி உயர்வு கூட கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவர். ஆனால் குடும்ப ரீதியாக பார்த்தால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வரும். ஆகையால் இருவரும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அதோடு தேவையற்ற மருத்துவ செலவுகள் வரும். இப்படி நற்பலன்களையும் கெடுபலன்களையும் சனிபகவான் உங்களுக்கு சமமாகவே தரும் காலம் இது.

காக்கைக்கு அன்னமிடுவது, நவகிரகங்களை வளம் வருவது போன்ற எளிய பரிகாரங்களை நீங்கள் செய்வதன் மூலம் சனியின் தாக்கம் குறையும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasiகடக ராசிகாரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி அற்புதமாக உள்ளது. சனி பகவான் உங்களுக்கு அதிஷ்டத்தை அல்லித் தர உள்ளார். இதுவரை தீராமல் இருந்த அனைத்து கடன்களும் தீரும். தொழிலில் அதிகப்படியான லாபத்தை பார்ப்பீர்கள். பதவி உயர்வு, குடும்பத்தில் மகிழ்ச்சிச்சி என திரும்பும் திசை எங்கும் உங்களுக்கு இனி நம்மையே நடக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிய முயற்சிகளில் துணிந்து இறங்கலாம். பண வரவு அதிகரிக்கும் சமயம் என்பதால் நீங்கள் சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம்:
simmamசிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி சற்று மந்தமாகவே இருக்கும் என்றாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இதுவரை இருந்து வந்த தேவை இல்லாத மருத்துவ செலவுகள் சற்று குறையும். குழந்தைகள் விஷயத்தில் சற்று கவனம் தேவை. சிலர் தொழில் ரீதியாக குடும்பத்தை பிரிந்து செல்லவேண்டிய நிலை வரலாம். சொத்துவகையில் சிலருக்கு பிரச்சனைகள் வரலாம். ஆனால் எதற்கும் கவலை பட வேண்டும். இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள் அவர் அனைவரையும் காப்பார். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலிற்கு சென்று அவரை மனதார வணங்கி வாருங்கள் சனியின் தாக்கம் குறையும்.

கன்னி:
Kanni Rasiகன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி சற்று மோசமாகவே இருக்கும் . இந்த காலகட்டத்தில் நிறைய அலைச்சல்கள் இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. இந்த காலகட்டத்தில் தேவை இல்லாத விரயச்செலவு ஏற்படும். வேலை காரணமாக சிலர் ஊர் மாறுதல், வீடு மாறுதல் போன்றவை ஏற்படும். உடல்நலத்தில் கவனம் தேவை. உடல் ஊனமுற்றோர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சனியின் தாக்கம் குறையும். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வாருங்கள்.

துலாம்:
Thulam Rasiதுலாம் ராசிகாரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி அதிஷ்டம் தான். உங்களுக்கு ஏழரை சனி முழுவதும் முடியும் காலம் இது. கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களை பாடாய் படுத்தி பலவித பயிற்சிகளை கொடுத்திருப்பார் சனி பகவான். இனி கடந்த ஏழரை வருடங்களில் நீங்கள் பெற்ற அனுபவம் மூலம் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ளும் காலம் வந்துவிட்டது. செய்யும் தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி இப்படி அனைத்தும் நன்மையே. இந்த காலகட்டத்தில் நீங்கள் துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். அதனால் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். புதிய சொத்து, வீடு வாகனம் என அனைத்தையும் நீங்கள் சேர்க்கும் காலம் இது.

விருச்சிகம்:
Virichigam Rasiவிருச்சிக ராசிகாரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சற்று கடினமான காலம் தான். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் நாவை அடக்குவது நல்லது. இல்லையேல் தேவை இல்லாத பிரச்சனைகள் வரும். நீங்கள் குடும்பத்தில் மிகவும் அனுசரித்து செல்லவேண்டிய காலம் இது. பண தட்டுப்பாடு ஏற்படலாம். தேவை இல்லாத வம்பை நீங்களே விலைகொடுத்து வாங்கிக்கொள்ளாமல் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

என்னடா இது சனி பெயர்ச்சி இப்படி இருக்கிறதே என்று கவலை கொள்ளவேண்டாம். அனைவருக்கும் நீங்கள் நல்லதையே செய்யுங்கள். சனி உங்களுக்கு நல்லதை செய்வார். அனைத்திற்கும் மீறி தெய்வ சக்தி என்று ஒன்று உள்ளது. கடவுளை வணங்குங்கள் அவர் உங்களை காத்தருள்வார். முடிந்தால் திருநள்ளாறு சென்று சனி பகவானை தரிசித்து வாருங்கள்.

இதையும் படிக்கலாமே:
சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான மிக எளிய முறை

- Advertisement -

தனுசு:
Dhanusu Rasiதனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி பல பிரச்சனைகளை அதிகரிக்கும். எடுத்த காரியத்தில் தடை ஏற்படலாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கடன் கொடுப்பதையும் ஜாமின் கையெழுத்து போடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானத்தை விட அதிகமாக செலவுகள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களால் தீமையே ஏற்படும். பெற்றோர்களின் உடல் நிலையில் அக்கறை செலுத்தவும்.

கணவன் மனைவி அன்பு சுமாராக இருக்கும், குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். போராட்டம் நிறைந்த காலமாகவே இது இருக்கும், நாட்கள் செல்ல இது படிப்படியாக குறையலாம்.

சனிக்கிழமை தோறும் காகத்திற்கு மதிய உணவு வைத்த பின் உண்ணவும். திருநள்ளாறு சென்று நீராடி எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. இதன் மூலம் சனியின் தாக்கம் குறையும்.

மகரம்:
Magaram rasiமகர ராசிகாரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி பல சிக்கல்களை தரும். இறை வழிபாடு மிகவும் அவசியமானது. இந்த சனி பெயர்ச்சியில் இவர்களுக்கு விரய சனி ஆரம்பமாகிறது, இது ஏழரை சனியின் ஒரு பகுதி. இந்த சமயங்களில் செய்யும் தொழிலில் முடக்கம் ஏற்படலாம், தொழில் நஷ்டம் வர வாய்ப்புள்ளது. தொழிலில் பெரும் முதலீட்டை தவிர்ப்பது நல்லது, பணம் கொடுக்கல் வாங்குதல் நல்லது இல்லை. யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். சொந்த பந்தங்கள் விலகி செல்வார்கள், நபர்களுக்குள் பகைமை ஏற்படும். நடப்பது விரய சனி என்பதால் மருத்துவ செலவு ஏற்படும், பெற்றோர்கள் உடல் நிலையில் அக்கறை செலுத்தவும். வேலை செய்யும் இடத்திலும் வீட்டிலும் மரியாதை குறைவு ஏற்படலாம். வேலை விஷயமாக வெளியூர் செல்ல வாய்ப்புள்ளது, அலைச்சல் அதிகரிக்கும்.

சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வரவும். ஒரு முறை திருநள்ளாறு சென்று நீராடி வருவது நல்லது. இதன் மூலம் சனியின் தாக்கம் குறையும்.

இதையும் படிக்கலாமே:
சனியின் பிடியில் இருந்து விடுபட உதவும் எளிய பரிகாரங்கள்

கும்பம்:
Kumbam Rasiகும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி நன்றாக உள்ளது. இதன் மூலம் உங்களுக்கான நன்மைகள் தொடரும். புகழ் மற்றும் கவுரவம் கூடும். நண்பர்களின் உதவி கிடைக்கும், பண வரவு அதிகரிக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம், அதிக லாபம் பெறுவீர்கள். திருமண தடைகள் நீங்கி, திருமணம் கை கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதலர்களுக்கு காதல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. கடன் தொல்லைகள் தீரும்.

நினைத்த நன்மைகள் யாவும் கிடைக்கும் வகையில் இந்த சனி பெயர்ச்சி அமையும். சனி பகவானின் 8ஆம் பார்வையால் வாகனங்களில் செல்லும் போது மட்டும் கவனம் தேவை.

நவகிரக வழிபாடும், குல தெய்வ வழிபாடும் உங்களுக்கு இன்னும் நன்மைகளை அதிகரிக்கும்.

மீனம்:
Meenam Rasiமீன ராசிகாரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியின் மூலம் மாறுபட்ட பலன்கள் கிடைக்கும். நம்மை தீமை இரண்டும் கலந்த கால கட்டமே இது. தொழிலில் கவனம் தேவை. குடும்பத்தினரிடம் அன்பாக இருக்க வேண்டும், தேவையற்ற மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். பெரும் முதலீட்டை தவிர்ப்பது சிறந்தது. வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. உடல் நலனில் அக்கறை செலுத்தி மருத்துவ செலவை தவிர்க்கவும்.

பொதுவாக இந்த காலகட்டத்தில் வரவை தாண்டிய செலவு வரும், ஒருசிலருக்கு வேலை மாற்றம், ஊதிய குறைப்பு போன்றவை ஏற்படலாம். பொதுவாக நீங்கள் அனைத்து விஷயத்திலும் கவனமாக நடந்துகொள்வது உங்களுக்கு நல்லது.

சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வரவும். ஒரு முறை திருநள்ளாறு சென்று நீராடி வருவது நல்லது. இதன் மூலம் சனியின் தாக்கம் குறையும்.

இந்த சனிப்பெயர்ச்சியின் மூலன் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் ஏதும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதன் பயனாக அவர் அனைவருக்கும் அருளை வாரி வழங்குவார் என்பது உறுதி. பக்தியே சிறந்த பரிகாரம் என்று எண்ணி இறைவனை தினம்தோறும் பிராதியுங்கள் அவர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார்.

sani bagavaan

English overview:

Sani Peyarchi Palangal 2017 – 2020

We all know that saturn transition(Sani Peyarchi) is going to happen in 2017. Since saturn(sani) is the slowest planet it will take two and half years to transit from one zodiac sign to another zodiac sign.

As per astrology Saturn (sani) is considered as the bad planet. So when ever Saturn transition (Sani Peyarchi) happens people will keenly watch to check whether they will be getting good or bad benefits because of the transition(Sani Peyarchi).

As per the trik panchang saturn transtion(Sani peyarchi) is going to happen on 26-1-2017 from scorpion to Sagittarius. if saturn(sani) is in one’s zodiac sign then he will trouble that person to make him strong. There will be heavy work load, body pain and few other things like this.

Transit of Saturn(Sani) in to 4th place from zodiac results in Arthaashtama saturn(Arthaashtama sani), Transit of Saturn(Sani) in to 7th place from zodiac results in Kandaga saturn(Kandaga sani) and Transit of Saturn(Sani) in to 8th place from zodiac results in Ashtama saturn(Ashtama sani).

If the Saturn (sani) is in the zodiac then it is called as jenma saturn (Jenma Sani). If it is in front of the Zodiac then it is called as Viraya Saturn (Viraya Sani) which leads to lot of expenses. If the Saturn (Sani) is in back of zodiac then it is called as Family saturn(Kudumba Sani) which leads to problem in the family life. Last but not least, if the saturn(sani) transiting front and back of zodiac then it is called as ezharai sani (seven and half years sani).

If a person have sani Dhasa or Sani budhi or andharam then saturn(sani) will defenitely teach a great lesson to that person. Even though the lesson thought by saturn(sani) are tough it will be very useful to lead the life further. Apart from sanipeyarchi palan if you want to know about your today rasi palan then you get it from our site.

- Advertisement -