- Advertisement -
சமையல் குறிப்புகள்

கோதுமை மாவில் செய்யக்கூடிய இந்த கார கொழுக்கட்டையை உங்கள் வீட்டில் இன்று செய்து பாருங்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் விருப்பமாக சாப்பிட்டு மகிழ்வார்கள்

- Advertisement -

இதுவரை அரிசி மாவில் செய்யக்கூடிய கொழுக்கட்டைகளை தான் இனிப்பு கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, உப்பு கொழுக்கட்டை என பல வகை உணவுகளை செய்திருக்கிறோம். ஆனால் முதல்முறையாக கோதுமை மாவில் செய்யக்கூடிய இந்த கொழுக்கட்டையை ஒருமுறை செய்து சுவைத்துப் பாருங்கள். இனிமேல் அடிக்கடி இதனை செய்து சாப்பிடுவீர்கள். மேகி, பாஸ்த்தா என்று கேட்கும் குழந்தைகளுக்கும் இந்த கோதுமைமாவு கொழுக்கட்டை செய்து கொடுத்துப் பாருங்கள். அவர்களும் இதன் சுவையை விரும்பி சாப்பிட்டு மகிழ்வார்கள். இதனை செய்வதற்கும் மிகவும் எளிமையாகத் தான் இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு சமைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், உப்பு – அரை ஸ்பூன், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 1, வரமிளகாய் – 3, பூண்டு – 5 பல், இஞ்சி சிறிய துண்டு – 1, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, நெய் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, கடாய் சூடானதும் ஒரு கப் கோதுமை மாவை அதில் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கோதுமை மாவை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு கோதுமை மாவினை வேறொரு தட்டிற்க்கு மாற்றி வைத்து, அதே கடாயில் கோதுமை மாவை அளந்த அதே கப்பில் ஒரு கப் தண்ணீர் எடுத்து ஊற்றி கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு தண்ணீர் நன்றாக கொதித்ததும் வறுத்து வைத்த கோதுமை மாவை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின்னர் இதனை மூடி போட்டு ஒரு ஐந்து நிமிடம் அப்படியே வைத்துவிடவேண்டும்.

- Advertisement -

பிறகு மூடியை திறந்து மாவினை கொழுக்கட்டைக்கு ஏற்றார் போல் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை ஒரு இட்லி தட்டில் வைத்து, அதனை இட்லி பாத்திரத்தில் வைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்னர் இந்த கொழுக்கட்டைகளை வேறு தட்டிற்க்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் 2 வெங்காயம் மற்றும் தக்காளியை நான்கு துண்டுகளாக அறிந்து சேர்க்க வேண்டும். பிறகு காய்ந்த மிளகாய், சிறிய துண்டு இஞ்சி, பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை இதனுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு வேக வைத்த கொழுக்கட்டை, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கோதுமை மாவு கார கொழுக்கட்டை தயாராகிவிட்டது.

- Advertisement -