- Advertisement -
பொது பலன்

எந்த ராசிக்காரர்கள் எதை கைவிட்டால் வாழ்வில் முன்னேறலாம் தெரியுமா ?

பொதுவாகவே ஒவ்வொரு ராசியை சேர்ந்தவர்களிடமும் சில நல்ல விடயங்கள் இருக்கும் சில கெட்ட விடயங்கள் இருக்கும். ஒருவரிடம் இருக்கும் கெட்ட விடயங்களே அவர்களை பல நேரங்களில் முன்னேற விடாமல் தடுக்கிறது. அந்த வகையில் எந்த ராசிக்காரர்கள் எந்த கெட்ட விடயத்தில் இருந்து விடுபட்டால் வாழ்வில் முன்னேறலாம் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:

- Advertisement -

மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை பொறுமை என்பது அவர்களுக்கு சற்று குறைவாகவே இருக்கும். பார்ப்பதற்கு சாதுவாகவும் பொறுமைசாலிகள் போல தோற்றம் அளித்தாலும். உள்ளுக்குள் அவர்களிடம் கோபக்கனல் கொதிக்கும். பல நேரங்களில் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பொறுமையை இழந்து எரிமலையை போல வெடிப்பார்கள். இதனால் அவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டு மனதிற்குள் வருந்த நேரிடும். எந்த விடயத்தையும் இவர்கள் பொறுமையாக கையாண்டு, தங்களது கோபத்தை கட்டுப்படுத்தி பிரச்சனையை அணுகினால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள்.

ரிஷபம்:

- Advertisement -

ரிஷப ராசிக்காரர்கள் சில நேரங்களில் தங்களை தாங்களே தாழ்மையாக நினைத்து தனிமைப்படுத்திக்கொள்வர். இதனால் சில நேரங்களில் அவர்களது குணாதிசயம் பலருக்கும் முரட்டு தனம் போல கூட தோன்றும். தனிமையை விடுத்து, இவர்கள் தங்களது நட்பு வட்டாரத்தை வளர்த்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் அவர்களுக்கு வெளியுலக அறிவு மேம்படும். யாரிடம் எப்படி பழகவேண்டும் என்ற நிலை தெரியும். இதன் மூலம் அவர்கள் தங்களது நிலையை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

மிதுனம்:

- Advertisement -

மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை பல நேரங்களில் சிறு சிறு விடயங்களுக்கு கூட முடிவெடுக்க முடியாமால் அடுத்தவர்களின் உதவியை நாடி செல்வர். இதனால் அவர்களுக்கு பல நேரங்களில் பதற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஒரு விடயம் குறித்து முடிவெடுக்கும் முன்பு அதை பற்றி நன்கு ஆராய்ந்து அமைதியாக சிந்தித்து முடிவெடுத்தால் அவர்களது வாழ்க்கை அவர்கள் கையில் இருக்கும். அதோடு அவர்கள் வெற்றியை நோக்கி பயணிக்க இதுவே எதுவாக இருக்கும்

கடகம்:

கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை எதையும் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாகவே சொல்வார்கள். இதன் மூலம் பல நேரங்களில் அவர்கள் என்ன சொல்ல விழைகிறார்கள் என்பதே பலருக்கு புரியாமல் போக வாய்ப்புகள் உண்டு. ஆகையால் எதற்கும் அஞ்சாமல் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை அவர்கள் வெளிப்படையாக கூறுவதன் மூலம் அவர்களுள் இருக்கும் அறிவுத்திறனும் ஆற்றலும் முழுமையாக வெளிப்படும். இது அவர்களை முன்னேற்றப்பாதையில் இட்டு செல்லும்.

இதையும் படிக்கலாமே:
ஜாதகப்படி ஒருவருக்கு எப்போது யோக காலம் வரும் தெரியுமா ?

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் தங்களை தாங்களே பெருமையாக நினைத்துக்கொண்டு பல விடயங்களை செய்வதுண்டு. அதே போல பிறரும் தங்களை பெருமையாக நினைக்கவேண்டும் என்று நினைப்பதுண்டு. இந்த எண்ணத்தை விடுத்து அவர்கள் நிஜ சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல நடந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்களை சுற்றி உள்ள பிற நல்ல விடயங்களை கவனிக்க தொடங்குவதன் மூலம் வாழ்க்கை வளமாகும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் பல நேரங்களில் புகழ்ச்சியை விரும்புபவர்களாக இருப்பார்கள். ஆகையால் இவர்களை புகழும் நண்பர்களிடம் இவர்கள் அதிகம் பழகுவார்கள். ஆனால் வெற்று புகழ்ச்சியால் எதுவும் நடக்கப்போவதில்லை என்ற உண்மை நிலையை இவர்கள் உணர்வது அவசியம். புகழ்ச்சி என்பது முக்கியம் என்றாலும் கூட அதையும் தாண்டி பல விடயங்களை செய்ய வேண்டி உள்ளது என்பதை இவர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் வாழ்கை சிறக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் பல நேரங்களில் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்பது போல கறாராக பேசிவிடுவார்கள் இதனால் சில நேரங்களில் அவர்கள் தங்கள் மேல் அக்கறை வைத்துள்ள சில நல்லுள்ளங்களை கூட இழக்க நேரிடும். சில சமயங்களில் இவர்கள் பிறர் காட்டும் அன்பில் எளிதில் மயங்கிவிடுவார்கள் இதனால் பிறர் இவர்களை கொண்டு தங்களது காரியத்தை எளிதில் சாதித்து விடுவார். ஆகையால் இவர்கள் கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டும், எது உண்மையான அன்பு என்பதை தெளிவாக புரிந்து செயல்படவும் வேண்டும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை அடுத்தவரின் வெற்றியை கண்டு சிறிது பொறாமை படுவதுண்டு. இந்த பொறாமை குணத்தை அவர்கள் கைவிட்டு, அடுத்தவர்கள் எப்படி வெற்றிபெற்றார்கள் என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப உழைப்பதே புத்திசாலி தனம். அப்படி செய்வதன் பலனாக இவர்கள் தங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது நிச்சயம்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் சில நேரங்களில் தங்கள் மனதில் உள்ள நல்லது கெட்டது போன்ற அனைத்து விடயங்களையும் யாராவது ஒருவரிடம் பகிர்ந்துகொள்வார்கள். இந்த செயலின் மூலம் பிற்காலத்தில் அவர்களுக்கு சில பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. ஆகையால் இது போன்ற விடயங்களை அவர்கள் தவிர்த்து ஆக்கப்பூர்வமாக யோசித்து வாழ்வில் வெற்றி காண்பது நல்லது.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் பெரும்பாலான சமயங்களில் நேர்மறையாக சிந்தித்து ஆக்கப்பூர்வமாக செயல்பட்டாலும் சில நேரங்களில் எதிர்மறையாமாவும் சிந்தித்து கோட்டை விடுவது வழக்கம். அதே போல இவர்கள் அதிகம் அவசரப்பட்டு சில செயல்களில் இறக்கிவிட்டு பிறகு தவிப்பது வழக்கம். ஆகையால் எப்போதும் நிதானமாக யோசித்து அனைத்தையும் செய்தால் வெற்றி எப்போதும் இவர்கள் வசமாக இருக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவதுண்டு. இதன் காரணமாக அவர்களால் எந்த விடயத்திலும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முடியாமல் தவிப்பர். ஆகையால் இவர்கள் தங்கள் உணர்வுகளை கட்டுக்குள் வைத்து செயல்படுவது நல்லது. இதற்காக அவர்கள் தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம்.

மீனம்:

மீன ராசிக்கார்களை பொறுத்தவரை சில நேரங்களில் எந்த பாதையில் சென்றால் வெற்றி பெறமுடியும் என்பதை சரியாக கணிக்க முடியாமல் தடுமாறுவார்கள். அந்த சமயங்களில் அவர்கள் தங்களுக்கு வழிகாட்டியாக இருப்பர்வர்கள் மீது கூட முழு நம்பிக்கை வைக்க தயங்குவார்கள். இது போன்ற செயல்களை தவிர்த்து முழு மனதோடு ஒரு செயலில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

ராசி பலன், ஜோதிடம் மற்றும் அனைத்து ஆன்மீக தகவலைகளையும் ஒரே இடத்தில பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

- Advertisement -