லக்கினத்தை வைத்து ஒருவருக்கு எப்போது யோக காலம் வரும் தெரியுமா ?

astrology

நாம் நமது வாழ்வில் பார்த்த சிலர் திடீர் என்று சில காலங்களில் முன்னுக்கு வருவர். அது இளமைகாலமாக இருக்கலாம் அல்லது வயதான பிறகும் கூட இருக்கலாம். இதை தான் ஒருவரின் யோக காலம் என்று ஜோதிடம் கூறுகிறது. யோக காலங்களில் ஒருவர் சரியாக சிந்தித்து செயல்பட்டால் அவர் முன்னுக்கு வருவது உறுதி. அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தின் உயிர் நாடியாக திகழும் லக்கினத்தை வைத்து ஒருவருக்கு எந்த சமயத்தில் யோக காலம் வரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷ லக்னம்

mesham

மேஷ லக்கினத்தில் பிறந்தர்வர்களுக்கு குரு திசையும், சூர்ய திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். ஆகையால் உங்கள் ஜாதகப்படி இந்த திசை எப்போது வருகிறது என்பதை தெரிந்துகொண்டு அந்த காலகட்டத்தில் நீங்கள் சரியாக செயல்பட்டால் நிச்சயம் வெற்றி உங்கள் வசமாகும். அந்த காலகட்டத்தில் நீங்கள் சரியாக திட்டமிட்டால் மிக எளிதில் வீடு, சொத்து, வாகனங்கள் என அனைத்தையும் சேர்க்கலாம்.

ரிஷப லக்னம்

rishabam

ரிஷப லக்கினத்தில் பிறந்தர்வர்களுக்கு சனி திசையும், புதன் திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால், நீங்கள் என்னா வண்ணம் உங்களிடம் பணம் வந்து சேரும். வாழ்வில் பன் மடங்கு உயர்வீர்கள்.

மிதுன லக்னம்

midhunam

மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசையும், சுக்கர திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் செல்வவளம் பெருகும். வீடு, வாகனம், மனை என அனைத்தும் சேர்க்கு காலம் அது.

Advertisement

கடக லக்னம்

kadagam

கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு திசையும், செவ்வாய் திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் வாழ்வில் பன்மடங்கு வளர்ச்சியை காணிப்பீர்கள். வீடு வாகனம் என அனைத்தையும் சேர்ப்பீர்கள்.

சிம்ம லக்னம்

simmam

சிம்ம லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசையும், குரு திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் புகழின் உச்சியை சென்றடைவீர்கள். பதவி உயர்வு, சொகுசு வாகனம் வாங்குதல் போன்றவை உங்களுக்கு அந்த கால கட்டத்தில் எளிதில் கை கூடும்.

கன்னி லக்னம்

kanni

கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசையும், சுக்கர திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் உங்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். அதுவே உங்களது வாழ்வில் ஒரு வசந்த காலமாக அமையும். அந்த காலகட்டத்தில் நீங்கள் விரும்பியதை அடையலாம்.

துலாம் லக்னம்

thulam

துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் திசையும், சனி திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் உங்கள் அந்தஸ்து சமுதாயத்தில் பன்மடங்கு உயரும். எண்ணிலடங்கா பல செல்வங்களை சேர்க்கும் காலம் அது.

இதையும் படிக்கலாமே:
எகிப்திய ஜோதிடம் உங்களை பற்றி கூறும் சில சுவாரஸ்ய தகவல்கள்

விருச்சக லக்னம்

virichigam

விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர திசையும், குரு திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் உங்கள் வாழ்க்கையே தலை கீழாக மாறும். யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உங்கள் வாழ்க்கை நிலை உயரும். உங்களை தூற்றியவர்கள் கூட உங்கள் உதவியை நாடி வரும் காலம் அது.

தனுசு லக்னம்

dhanusu

தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூர்ய திசையும், செவ்வாய் திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் அது உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். அனைத்து செல்வங்களையும் சேர்க்கும் காலம் அது.

மகர லக்னம்

magaram

மகர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசையும், சனி திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் செல்வம் பெருகும், வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும், சமுதாயத்தில் அந்தஸ்து கூடும்.

கும்ப லக்னம்

kumbam

கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு; புத திசையும், சனி திசையும், சுக்கிர திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் உங்களின் வளர்ச்சி அபரிவிதமான இருக்கும். மற்றவர்கள் பார்த்து பொறாமைகொள்ளும் அளவிற்கு உங்கள் வாழ்க்கை நிலை உயரும்.

மீன லக்னம்

meenam

மீன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசையும் சந்திர தசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும். உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் சிறப்பான வளர்ச்சி இருக்கும்.

ஜாதகம், வார பலன், மாத பலன், ஆன்மீக தகவல்கள் என பலவற்றையும் ஒரே இடத்தில பெற தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.