- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

சிவன் கஞ்சா குடிப்பவரா ? அவர் போதையில் இருப்பது உண்மைதானா ?

சிவன் தன் கையில் கஞ்சாவை வைத்துக்கொண்டிருப்பது போல பல படங்கள் இணையத்தில் இருக்கின்றன. அதோடு அவர் எந்நேரமும் போதையில் தான் இருப்பார் என்று சிலர் கூறுவதும் உண்டு. இதற்கான விடையை நாம் அறிவியல் ரீதியாக ஆராய்வோம் வாருங்கள்.

இந்த காலத்தில் பலர் போதைக்கு அடிமையாகி மடிகின்றனர். அவர்கள் மதுவை அருந்துவதற்கு காரணமே போதையில் இருக்க வேண்டும் என்பதற்காக தான். ஆனால் மதுவை அருந்திய சில மணி நேரங்களிலேயே அவர்கள் மயங்கி விழுவதுண்டு.

- Advertisement -

சிவனும் போதையில் தான் இருக்கிறார். அதனால் தான் அவருக்கும் சோமேஸ்வரர் என்றொரு பெயரும் உண்டும். சோமம் என்றால் போதை என்று தானே அர்த்தம். ஆனால் அவர் போதைக்காக எதையும் அருந்துவது கிடையாது, போதையில் இருக்கும்போது மயங்குவதும் கிடையாது. இது சாத்தியமா என்றால்? சாத்தியமே.

அமெரிக்க விஞ்ஞானிகள், சில வருடங்களுக்கு முன்பு மனிதனின் மூலை குறித்து ஒரு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் முடிவில் அவர்களுக்கு ஒரு அற்புதானமான விஷயம் கிடைத்தது. மனித உடலானது தனக்குள்ளே போதையை சுரக்கும் ஆற்றலை கொண்டது என்பதே அந்த ஆய்வின் முடிவு.

- Advertisement -

நமது நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் பலரும் இந்த போதையில் இருந்திருக்கலாம். அவர்கள் தங்கள் உடல் மூலமே போதையை ஏற்படுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால் அதன் காரணமாக அவர்கள் என்றும் நிலை தவறியதில்லை, மயங்கியதும் இல்லை. ஒரு மனிதன் தனக்குள்ளே போதையை சுரக்க செய்வதென்பது சாதாரண விஷயம் இல்லை.

போதையை சுரக்க செய்ய ஒருவன் பல விதமான தியானங்களையும் யோகங்களையும் செய்யவேண்டும். அந்த போதையானது அவனுக்கு ஆனந்தத்தை தருமே தவிர அவன் உடலை பாதிக்காது, அறிவை பாழாக்காது, மயக்கத்தை தூண்டாது. அதுவே நிலையான ஆனந்தம். இந்த உண்மை நிலை அறியாத சிலர் தான், சிவன் தன் கையில் கஞ்சா வைத்திருப்பது போன்ற படங்களை பரப்புவது, சிவன் எந்நேரமும் கஞ்சா போதையில் திளைப்பவர் என்ற தவறான செய்திகளை பரப்புவர்.

 

 

- Advertisement -
Published by