- Advertisement -

என்ன செய்தாலும் செல்வம் சேரவில்லையா? கடன் சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறதா? இதனால் உடல்நலனிலும் அடிக்கடி பாதிப்பு ஏற்படுகிறதா? இவை மூன்றும் சரியாக அருமையான பரிகாரம்.

மனிதனின் வாழ்வில் பணம் என்பது தற்காலத்தில் பிரதானமான ஒன்றாக மாறிவிட்டது. பணம் இல்லை என்றால் கவலை ஏற்படுகிறது அதோடு சேர்ந்து தேவைக்காக கடன் வாங்கவும் நேரிடுகிறது. பிறகு கடனை அடக்கமுடியாமல் மனதளவில் கஷ்டப்பட்டு பிறகு உடல்நலனும் இதனால் பாதிக்கப்படுகிறது. பிறகு உடலை கவனிக்க மீண்டும் கடன் வாங்க நேரிடுகிறது. இப்படி கஷ்டத்திலேயே ஓடும் வாழ்க்கையை மாற்றி அமைக்க கூடிய 3 முத்தான பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதை அவரால் சமாளிக்க முடியும். ஆனால் உடல் நலலில் பாதிப்பு ஏற்படும் பொழுது அவருக்கு மட்டும் இன்றி அவரை சுற்றி இருக்கும் மற்றவர்களுக்கும் பல விதங்களில் பாதிப்புகள் ஏற்படுகிறது. உடல் நலன் பாதிப்பில் இருந்து வெளிவருவதற்கான பரிகாரத்தை முதலில் பார்ப்போம்.

- Advertisement -

உடல்நல பாதிப்பு விலக பரிகாரம்:
இந்த பரிகார முறைக்கு தேவைப்படும் பொருட்கள் மஞ்சள் தூள் மற்றும் தேன். இந்த மஞ்சள் தூள் மற்றும் தேனை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் நரசிம்மர் கோவிலுக்கு சென்று நரசிம்மருக்கு அபிஷேகம் செய்ய வழங்க வேண்டும். பிறகு அர்ச்சகர் இடம் கூறி நரசிம்மருக்கு அபிஷேகம் செய்த தேனை வாங்கி வந்து, உடல்நலம் பாதிக்கப்பட்டவருக்கு தொடர்ந்து கொடுத்து வர அவர்கள் உடல் நலனில் நல்ல மாற்றம் ஏற்படும்.

கடன் சுமை நீங்க பரிகாரம்:
கடன் சுமை அதிகமாக இருக்கும் பொழுது, நாம் சனிக்கிழமையில் சனி ஹோரையில் ஆஞ்சநேயரை அல்லது விநாயகரை வணங்க வேண்டும். இவர்கள் இருவரையும் வணங்கி வரும் பொழுது நம்முடைய கடன் சுமை குறையும். மேலும் சனிக்கிழமைகளில் கோமியத்தை வாங்கி வந்து தொழில் ஸ்தாபனங்களிலும், வீடுகளிலும் தெளித்து வர மகாலட்சுமியின் கடாட்சம் பெற்று கடன் சுமை விரைவில் தீர்ந்துவிடும்.

- Advertisement -

செல்வம் பெறுக வழிபாடு:
மனிதனின் வாழ்வில் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்தவும், செல்வ நிலையில் செழிப்பை மேம்படுத்தவும் உதவுவது கஜ வழிபாடு ஆகும். கஜ என்பது யானையை குறிக்கும். அதாவது யானை வழிபாட்டை நாம் மேற்கொள்ளும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு, செல்வ செழிப்பு அதிகரித்து, நாம் நினைத்தது எந்த தடங்கலும் இன்றி நடைபெற உதவுகிறது.

யானை ஊதினால் தடைகள் விலகும் என்று கூறும் வழக்கம் இருக்கிறது. அதாவது யானையின் ஆசிர்வாதத்தை நாம் பெறும் பொழுது நமக்கு இருக்கும் தடைகள் அனைத்தும் விலகி வெற்றிகள் பல கிட்டும் என்பதே அதன் முழுமையான அர்த்தம். ஆதலால் நாம் யானை இருக்கும் எந்த கோவிலுக்கு சென்றாலும், அங்கு அந்த யானையின் பரிபூரணமான ஆசீர்வாதத்தை பெற வேண்டும். அவ்வாறு பெறுவதன் மூலம் நம் வாழ்வில் இருக்கும் தடங்கல்கள் நீங்கி, நல்ல பல மாற்றங்களை காணலாம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -